இந்தியா

அடுத்த ஆண்டு ஜனவரியில் மோடி - ராஜபக்சே சந்திப்பு?

Added : அக் 09, 2021
Share
Advertisement
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சேவை, நம் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஆண்டு ஜனவரியில் சந்தித்து பேச உள்ளார். இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா, சமீபத்தில் நம் அண்டை நாடான இலங்கைக்கு அரசு முறைப் பயணமாக சென்றிருந்தார். அப்போது, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சேவையும் அவர் சந்தித்து பேசினார்.அப்போது, இந்தியா - இலங்கை பிரதமர்களுக்கு இடையிலான மாநாடு
 அடுத்த ஆண்டு ஜனவரியில் மோடி - ராஜபக்சே சந்திப்பு?

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சேவை, நம் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஆண்டு ஜனவரியில் சந்தித்து பேச உள்ளார்.

இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா, சமீபத்தில் நம் அண்டை நாடான இலங்கைக்கு அரசு முறைப் பயணமாக சென்றிருந்தார். அப்போது, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சேவையும் அவர் சந்தித்து பேசினார்.அப்போது, இந்தியா - இலங்கை பிரதமர்களுக்கு இடையிலான மாநாடு குறித்து, இலங்கை அரசு தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து இந்திய துாதரக அதிகாரிகளிடமும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த கோரிக்கையை ஏற்று, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே, அடுத்த ஆண்டு ஜனவரியில் டில்லி வரவுள்ளதாகவும், அப்போது பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேச உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே புதிதாக நியமிக்கப்பட்டு உள்ள இந்தியாவுக்கான இலங்கை துாதர் மிலிந்தா மொராகோடாவை, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக தகவல்கள் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு, இந்தியா தரப்பில் கவலையும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஊடுருவி இருப்பதாக, இந்திய அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், சென்னையில் ஒருவரை தேசிய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துஉள்ளனர். இதுகுறித்த விரிவான அறிக்கையை மாநில கவர்னர் மற்றும் மாநில அரசிடம், மத்திய அரசு கோரி உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
-- புதுடில்லி நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X