பொது செய்தி

இந்தியா

நிலக்கரி தட்டுப்பாடு: இருளில் மூழ்கும் டில்லி?

Updated : அக் 10, 2021 | Added : அக் 09, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி:''கையிருப்பில் இரண்டு நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே உள்ளது. உடனடியாக நிலக்கரி கிடைக்காவிட்டால், டில்லி இருளில் மூழ்கும் அபாயம் உள்ளது,'' என, டில்லி மின்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார்.நாட்டின் மொத்த மின் தேவையில் 70 சதவீதம், நிலக்கரி வாயிலாக இயக்கப்படும் அனல் மின் நிலையங்களில் இருந்தே கிடைக்கிறது. நாடு முழுதும் உள்ள 135 அனல் மின்
 நிலக்கரி, தட்டுப்பாடு: இருள், மூழ்கும் டில்லி?

புதுடில்லி:''கையிருப்பில் இரண்டு நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே உள்ளது. உடனடியாக நிலக்கரி கிடைக்காவிட்டால், டில்லி இருளில் மூழ்கும் அபாயம் உள்ளது,'' என, டில்லி மின்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார்.

நாட்டின் மொத்த மின் தேவையில் 70 சதவீதம், நிலக்கரி வாயிலாக இயக்கப்படும் அனல் மின் நிலையங்களில் இருந்தே கிடைக்கிறது. நாடு முழுதும் உள்ள 135 அனல் மின் நிலையங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை, போதிய நிலக்கரி இல்லாமல் மின் உற்பத்தி குறைந்து உள்ளது. கடும் மின் தடையை சந்திக்க நேரிடும் நிலையில் உள்ளதாக தமிழகம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கனவே கூறியுள்ளன.

இந்நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அமைந்து உள்ள டில்லியும் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளது.டில்லி மின்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளதாவது:டில்லிக்கு தேவையானன மின்சாரத்தை தயாரிக்கும் நிலையங்களில், அடுத்த இரண்டு நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது.

உடனடியாக நிலக்கரி வினியோகம் செய்யப்படாவிட்டால் டில்லி இருளில் மூழ்கும் நிலை ஏற்படும்.இந்தப் பிரச்னை திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாக தெரிகிறது. கொரோனா பரவல் இருந்தபோது ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுபோல். தற்போது நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரச்னையை உருவாக்கி. அதற்கு தாங்கள் தான் தீர்வு கண்டதாக விளம்பரப்படுத்திக் கொள்ள முயற்சி நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

இந்தப் பிரச்னை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, உத்தர பிரதேசம், பஞ்சாப், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களும் கூறியுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MANIAN K - Dubai ,இந்தியா
10-அக்-202119:41:16 IST Report Abuse
MANIAN K கரி நிபுணர் முண்டாசு பட்டி ஆலோசனை சொல்வார்
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
10-அக்-202113:41:51 IST Report Abuse
r ravichandran மின்சாரமே இல்லாமல் போனால் போகட்டும், ஆனால் அதற்காக தமிழ்நாடு உட்பட எந்த மாநிலத்திலும் நிலக்கரி சுரங்கம், அணுமின் நிலையம், இயற்கை எரிவாயு, பெட்ரோல் போன்றவற்றை தோண்டி எடுத்து சுற்று சூழல் பாதிப்பு ஏற்பட விடக்கூடாது என்பது தான் கம்யூனிஸ்ட், திமுக கட்சி நிலைப்பாடு.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
10-அக்-202111:20:03 IST Report Abuse
duruvasar ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று நாட்டையும், நீதிமன்றங்களையும் ஏமாற்றி கள்ள சந்தையில் விற்றவனுங்க. இப்போ நிலக்கரியை கையில் எடுத்திருக்கானுங்க. இந்தியாவின் சாபக்கேடு இந்த கும்பல்.
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
10-அக்-202118:56:55 IST Report Abuse
DVRR1000% உண்மை இப்போவும் அதே மாதிரி தான் ஏதாவது டுபாக்கூர் வேலை செய்து காண்பிப்பார்கள் இந்த ஆம் ஆத்மீ அறிவிலிகள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X