பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி டோஸ்' 100 கோடியை விரைவில் எட்டும்'

Updated : அக் 10, 2021 | Added : அக் 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா தடுப்பூசி பணிகளின் முன்னேற்றம் குறித்த கலந்தாய்வு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் டில்லியில் நடந்தது. இதில், மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண், மாநிலங்களின் தேசிய சுகாதார திட்ட முதன்மை செயலர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நேற்று மட்டும் இரவு 7:00 மணி வரை, 65 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்
தடுப்பூசி ,டோஸ்' 100 கோடி, எட்டும்'

புதுடில்லி:கொரோனா தடுப்பூசி பணிகளின் முன்னேற்றம் குறித்த கலந்தாய்வு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் டில்லியில் நடந்தது. இதில், மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண், மாநிலங்களின் தேசிய சுகாதார திட்ட முதன்மை செயலர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நேற்று மட்டும் இரவு 7:00 மணி வரை, 65 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதன் வாயிலாக இதுவரையில் செலுத்தப்பட்ட ஒட்டுமொத்த டோஸ் 94.60 கோடியை கடந்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:நாட்டில் இதுவரை செலுத்திய தடுப்பூசி 'டோஸ்' எண்ணிக்கை 94.60 கோடியை கடந்துள்ளது.

ஒருசில நாட்களில் அது 100 கோடியை எட்டும். இந்த மைல்கல்லை நாம் மிக விரைவாக அடைந்துள்ளோம்.பண்டிகை மற்றும் திருவிழாக்களின்போது மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
10-அக்-202106:33:08 IST Report Abuse
Kasimani Baskaran சிறப்பு. ஆராய்ச்சியில் இருந்து ஆரம்பித்து மருந்து செலுத்துவோர் வரை கடினமான காலக்கட்டத்தில் பலர் தங்களது சிறப்பான செயல்பாடுகளை தொடர்ந்து நல்கி வருக்கிறார்கள். தொடர்ந்து உழைக்க நிச்சயம் இவர்களுக்கு அனைவரின் பாராடுகளும் ஊக்கம் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரண்டு தவணைகள் தடுப்பூசி போட்டுக்கொள்வது கோவிட்19 லிருந்து அதிக பாதுகாப்பை உறுதி செய்யும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X