சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

அனுபவத்தில் உணர்ந்த உண்மை!

Added : அக் 09, 2021
Share
Advertisement
அனுபவத்தில் உணர்ந்த உண்மை!மீன் குளத்தில் அசோலா தாவரம் வளர்ப்பது தொடர்பாக கூறும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் குமார்: எங்கள் பண்ணையில், மீன் குளத்தில் அசோலா வளர்த்து வருகிறோம். ஆனால், சில தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். உதாரணமாக, 3 சென்ட் நிலத்தில் மீன் குளம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இந்தக் குளத்தில் உள்ள மீன்களுக்கு, 15 நாட்களுக்கு
சொல்கிறார்கள்


அனுபவத்தில் உணர்ந்த உண்மை!



மீன் குளத்தில் அசோலா தாவரம் வளர்ப்பது தொடர்பாக கூறும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் குமார்: எங்கள் பண்ணையில், மீன் குளத்தில் அசோலா வளர்த்து வருகிறோம். ஆனால், சில தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். உதாரணமாக, 3 சென்ட் நிலத்தில் மீன் குளம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இந்தக் குளத்தில் உள்ள மீன்களுக்கு, 15 நாட்களுக்கு ஒருமுறை 13 கிலோ பசுஞ்சாணத்தைத் தீவனமாகக் கொடுக்க வேண்டும்.சாணத்தை அப்படியே குளத்தில் கொட்டினால், அசோலா வளர்ச்சி பாதிக்கப்படும். ஆகையால், தண்ணீரில் கலந்து, சாணிப்பால் போல குளத்தில் ஊற்ற வேண்டும். இதனுடன், தலா 13 கிலோ முருங்கை இலை, ேவப்பிலையை நன்றாக நறுக்கி குளத்தில் போட வேண்டும். மாதம் ஒரு முறை இதை செய்ய வேண்டும்.
முதல் முறை மட்டும், 10 கிலோ தாய் வித்து அசோலாவை குளத்தில் விட வேண்டும். அடுத்த 15-ம் நாள் அசோலா அறுவடைக்கு வந்துவிடும். அதன்பின், ஒருநாள் விட்டு ஒருநாள் அறுவடை செய்யலாம். குறைந்தபட்சம் 15 கிலோ கிடைக்கும்.ஆரம்பத்தில் மீன்கள், அசோலாவை திரும்பிக்கூட பார்க்காது. பழகியவுடன் அசோலாவை விரும்பி சாப்பிடும். தனியாக அசோலாவை வளர்ப்பதை விடவும், மீன் வளர்ப்புடன் செய்வதால் அதற்கும் தீவனம் கிடைக்கும்.
ஆடு, மாடு, கோழிகளுக்கும் அசோலாவை கொடுக்கலாம். மீன்களைப் போலவே, ஆடு, மாடுகளும் ஆரம்பத்தில் அசோலாவை சாப்பிடாது. மீண்டும் மீண்டும் தீவனத்தில் கலந்து கொடுத்தால் பழகிவிடும். ஆடு ஒன்றுக்கு தினமும் 250 கிராம் அளவில் கொடுக்கலாம்.அதேபோல், 10 லிட்டர் பால் கறக்கும் மாட்டுக்கு, குறைந்தபட்சம் 3 கிலோ அடர்தீவனம் கொடுப்பர். 3 கிலோ அசோலாவை, 1 கிலோ அடர்தீவனத்துடன் கலந்து கொடுத்தால், ஒரு மாதத்திற்கு 60 கிலோ அடர்
தீவனம் மிச்சமாகும். ஒரு கிலோ அடர்தீவனம் 7 ரூபாய் எனில், ஒரு மாட்டுக்கு 420 ரூபாய் மிச்சமாகும். செலவு மிச்சமாவதுடன் மாடுகளும் ஆரோக்கியமாக இருக்கும்; பால் உற்பத்தியும் பெருகும். குறித்த நேரத்தில் சினைப் பருவத்துக்கு வரும் என்பது தான் அசோலாவின் சிறப்பு. இவை அனைத்தும் என் அனுபவத்தில் உணர்ந்த உண்மை.தொடர்புக்கு: 98433 77470.


வயது தடையே இல்லை!



அழகுக்கலை நிபுணர் வசுந்தரா: மருத்துவர்களுக்கு அடுத்தபடியாக, அழகுக்கலை நிபுணர்களை நம்பியே தங்கள் உடலை ஒப்படைக்கின்றனர், மக்கள்.பிரபலமாக இருப்பவர்கள் நிபுணர்களாகத் தான் இருப்பர் என்று நினைக்காதீர்கள். அனுபவம் மிக்க பயிற்சியாளரிடம் மட்டும், அழகுக்கலை பயிற்சிகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.'ஆன் லைன்' பயிற்சி வகுப்புகளை விட, நேரில் சென்று கற்றுக் கொள்வது நல்லது. என்னிடம் அழகுக்கலை முடித்த 70 வயது பாட்டி, நார்வே நாட்டில் தொழில் துவங்கியிருக்கிறார்.
அழகுக்கலை துறையில் கால் பதிக்க வயது தடையே இல்லை; ஆர்வம் மட்டுமே முக்கியம். 'அலங்காரம் செய்யத்தானே வந்திருக்கீங்க...' என்ற தொனியில் வாடிக்கையாளர்கள் உங்களை நடத்தக் கூடும். சில வீடுகளில் உட்கார நாற்காலி கூட தர மாட்டார்கள். கோபத்தைத் தவிர்த்து, சிறு புன்னகையுடன் இத்தகைய சூழலை எதிர்க்கொள்ளுங்கள்.மணப்பெண் அலங்காரத்திற்குச் செல்லும்போது, சில நேரங்களில், இரவில் மண்டபத்திலேயே தங்க வேண்டியிருக்கும். எனவே, எங்கு சென்றாலும் குடும்பத்தில் உள்ள ஒருவரை பாதுகாப்புக்கு அழைத்துச்
செல்லுங்கள். பொதுவாக, திருமண வீடுகளில் ஏதேனும் நகை காணாமல் போனால் முதல் சந்தேகமே பியூட்டிஷியன் பக்கம் தான் திரும்பும்; எனவே, மேக்கப் முடியும் வரை, மற்றவர்களை அறையினுள் அனுமதிக்காதீர்கள்.மேக்கப் துறையில் மாடலிங் துறைக்கான மேக்கப், பிரைடல் மேக்கப், சினிமா மேக்கப் என, பல பிரிவுகள் இருக்கின்றன. இதில் உங்களுக்கேற்றதை தேர்வு செய்து
சம்பாதிக்கலாம். உலக அளவில் அழகுக்கலை நிபுணர் ஆக வேண்டும் என்றால், 'சிட்டி அண்ட் கில்ட்ஸ்' என்ற லண்டன் நிறுவனத்தில் சேர்ந்து டிப்ளமோ படிக்கலாம். இங்கு படிக்கும் படிப்புகள், 150 நாடுகளில் செல்லுபடியாகும். இதற்காக நீங்கள் லண்டன் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த அமைப்பில் பதிவு செய்துள்ள, உங்கள் பகுதியில் உள்ள பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்று, சான்றிதழ் பெறலாம். உங்களின் வாடிக்கையாளர்கள் விரும்பும் மேக்கப்போ, ஹேர்ஸ்டைலோ அவர்களுக்கு 'செட்' ஆகாது என நீங்கள் நினைத்தால் முகஸ்துதிக்காக அந்த 'அவுட்லுக்கை' கொடுக்க சம்மதிக்காதீர்கள்.'பியூட்டீஷியன் கோர்ஸ்' படித்து தொழில் தொடங்கி வருமானம் வருகிறது என இல்லாமல், புதுப்புது விஷயங்களில் உங்களை 'அப்டேட்' செய்து கொள்ளுங்கள்.இது போட்டி நிறைந்த தொழில். ஆனால், ஹேர், மேக்கப், ஸ்கின்கேர் என உங்களுக்கு எதில் திறமையும், ஆர்வமும் இருக்கிறது என்பதை அறிந்து, அதில் கவனம் செலுத்தி, வாடிக்கையாளர்களை முறையாக நடத்தினால், நிச்சயம் ஜெயிக்க முடியும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X