அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நீட்' விலக்கு பெற்றே தீருவோம்: அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி

Updated : அக் 11, 2021 | Added : அக் 09, 2021 | கருத்துகள் (46)
Share
Advertisement
சென்னை :''கண்டிப்பாக நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றே தீர்வோம்,'' என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, வழிகாட்டுதல் மற்றும் ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி, 'ஜெயித்துக் காட்டுவோம் வா' என்ற தலைப்பில், நேற்று சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர்
நீட், விலக்கு , அமைச்சர் ,சுப்பிரமணியன் உறுதி

சென்னை :''கண்டிப்பாக நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றே தீர்வோம்,'' என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, வழிகாட்டுதல் மற்றும் ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி, 'ஜெயித்துக் காட்டுவோம் வா' என்ற தலைப்பில், நேற்று சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவ - மாணவியர், 'நீட்' தேர்வு எழுதி உள்ளனர்.


அவர்களுக்கு, மன நல ஆலோசகர்கள், மருத்துவர்கள் உதவியுடன், தொலைபேசியில் கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுதிய 15 சதவீதம் மாணவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.மாணவர்கள் தேர்வுகளை கண்டு பயப்படாமல், வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சி இன்றும், நாளையும் மாலை 3:00 மணிக்கு, கல்வி தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பப்படும்.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி, சட்டசபை முதல் கூட்டத் தொடரில், 'நீட்' தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் உள்ள 12 மாநில முதல்வர்களுக்கும், 84 ஆயிரம் பேரிடம் பெறப்பட்ட கருத்துகளை அனுப்பி, நீட் தேர்வுக்கு எதிராக, மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்க முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழ், ஆங்கிலம் தவிர்த்து, ஏழு மாநில மொழிகளில், நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையை மொழி பெயர்த்து, அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இப்படி நீட் தேர்வுக்கு எதிராக, பல்வேறு முயற்சிகளை முதல்வர் எடுத்து வருகிறார். நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றே தீருவோம்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ், பேச்சாளர் சுகிசிவம், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, ஆனந்தம் அறக்கட்டளை நிர்வாகி செல்வகுமார் ஆகியோர், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் உரையாற்றினர்.



Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan_subramanian manian - Manama,பஹ்ரைன்
12-அக்-202119:53:39 IST Report Abuse
rajan_subramanian manian இன்று ஆந்திராவில் எல்லா அரசு பள்ளிகளையும் ஸீபீஎஸ்சி அங்கீகாரம் பெற ஜெகன் மோகன் ரெட்டி அரசு முடிவு செய்துள்ளது.நம்ம ஊரில் அண்ணா, தம்பி, போராட்டம், சமூகநீதி, நீட்,சொரியார்,சனாதன எதிர்ப்பு,விடுதலை குஞ்சுகளின் தலைவன் யார்?என்ற லெவெலில் கல்வி உள்ளது.இதில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் ஆட்டம் வேறு.தமிழ்நாடு விளங்கிடும்.
Rate this:
Cancel
chandar.N - chenakai,இந்தியா
12-அக்-202109:37:52 IST Report Abuse
chandar.N இப்படி சொல்லி சொல்லியெய் எத்தனையோ அப்பாவி மாணவ செல்வங்களை இழந்தும் நீங்கள் அரசியல் செய்ய வேறு ஒரு காரணமும் தெரியவில்லையா ?
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
10-அக்-202122:41:58 IST Report Abuse
Natarajan Ramanathan சுகிசவம், ஆர்ஜே பாலாஜி எல்லாம் எப்போது தீயமுகவில் இணைந்தனர்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X