பொது செய்தி

தமிழ்நாடு

சுந்தராபுரத்தில் வாகனங்கள் அணிவகுப்பு

Added : அக் 09, 2021
Share
Advertisement
போத்தனுார்:-கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், சுந்தராபுரம் நான்கு ரோடு சந்திப்பு மிக முக்கியமானது. ஆத்துப்பாலத்தில் இருந்து வரும் வாகனங்களுடன், சங்கம் வீதி, மதுக்கரை மார்க்கெட் சாலைகளில் வரும் வாகனங்களும், சிக்னலில் காத்திருக்கின்றன.ஆத்துப்பாலத்தில் இருந்து வருவோர், பொள்ளாச்சி ரோட்டில் நேராகச் செல்லவும், சங்கம் வீதிக்கும், மதுக்கரை மார்க்கெட் ரோடுக்கும்
 சுந்தராபுரத்தில் வாகனங்கள் அணிவகுப்பு

போத்தனுார்:-கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், சுந்தராபுரம் நான்கு ரோடு சந்திப்பு மிக முக்கியமானது. ஆத்துப்பாலத்தில் இருந்து வரும் வாகனங்களுடன், சங்கம் வீதி, மதுக்கரை மார்க்கெட் சாலைகளில் வரும் வாகனங்களும், சிக்னலில் காத்திருக்கின்றன.ஆத்துப்பாலத்தில் இருந்து வருவோர், பொள்ளாச்சி ரோட்டில் நேராகச் செல்லவும், சங்கம் வீதிக்கும், மதுக்கரை மார்க்கெட் ரோடுக்கும் பிரிந்து செல்கின்றனர். இம்மூன்று வழித்தடங்களிலும் செல்ல ஏராளமான வாகனங்கள் வருகின்றன.'பீக் ஹவர்ஸ்' சமயத்தில், சுந்தராபுரம் சந்திப்பு முதல் ஐயர் ஆஸ்பத்திரி ஸ்டாப் வரை, வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. சில வினாடிகளே 'கிரீன் சிக்னல்' கிடைப்பதால், சில வாகனங்களே கடக்க முடிகிறது; மற்ற வாகனங்கள் மீண்டும் காத்திருக்க வேண்டியுள்ளது. போக்குவரத்து சிரமத்தை தவிர்க்க, கிரீன் சிக்னல் வினாடிகளை அதிகரிக்க வேண்டும்.அதேபோல், மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் வருவோர், பொள்ளாச்சி சாலையை ஒட்டி வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால், பொள்ளாச்சி சாலையில் இருந்து மதுக்கரை மார்க்கெட் ரோட்டுக்கு வரும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்; சில நேரங்களில் விபத்தும் நேரிடுகிறது. மதுக்கரை மார்க்கெட் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.பஸ் ஸ்டாப்பை ரோட்டின் துவக்கத்தில் இருந்து மாற்றி, அரசு துணை சுகாதார மையம் அருகே மாற்ற வேண்டும். இதுதொடர்பாக, போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்து, நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X