பொது செய்தி

தமிழ்நாடு

கண்துடைப்பா நடத்தாதீங்க: ஆதங்கப்படும் போலீசார்

Added : அக் 09, 2021
Share
Advertisement
கோவை:'உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தில் நடத்தப்படும் குறைதீர்ப்பு முகாம்களால், தீர்வு கிடைப்பதில்லை' என, கோவை போலீசார் ஆதங்கப்படுகின்றனர்.'உங்கள் துறையில் முதல்வர்' என்கிற திட்டத்தில், போலீசாரின் குறைகளை தீர்க்க முகாம் நடத்த, உயரதிகாரிகளுக்கு டி.ஜி.பி., உத்தரவிட்டார். அதன்படி, கோவையில் நடத்திய முகாமில் பணியிட மாறுதல், தண்டனை குறைப்பு, ஊதிய முரண்பாடு களைதல்,

கோவை:'உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தில் நடத்தப்படும் குறைதீர்ப்பு முகாம்களால், தீர்வு கிடைப்பதில்லை' என, கோவை போலீசார் ஆதங்கப்படுகின்றனர்.'உங்கள் துறையில் முதல்வர்' என்கிற திட்டத்தில், போலீசாரின் குறைகளை தீர்க்க முகாம் நடத்த, உயரதிகாரிகளுக்கு டி.ஜி.பி., உத்தரவிட்டார். அதன்படி, கோவையில் நடத்திய முகாமில் பணியிட மாறுதல், தண்டனை குறைப்பு, ஊதிய முரண்பாடு களைதல், குடியிருப்பு கோருதல் உட்பட பல்வேறு தேவை குறித்து போலீசார் மனு கொடுத்தனர்,இம்மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. அதற்காக, இட மாறுதல் போன்ற சில மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. ஆனால், இம்முகாம்களால் எந்த பயனும் இல்லை என, போலீசார் ஆதங்கப்படுகின்றனர்.கோவையை சேர்ந்த போலீசாரில் சிலர் கூறியதாவது:குறைதீர்ப்பு முகாமில் பங்கேற்க முதல்நாளே மனு கொடுக்க அறிவுறுத்துகின்றனர். முகாம் தினத்தன்று, எங்களுக்கு 'டியூட்டி' எங்கே என, எங்களுக்கே தெரியாது. இப்போதும் பலர், உள்ளாட்சி தேர்தல் பணிக்காக வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதற்கு முன் பல முகாம்களில் கொடுத்த மனுக்களுக்கு இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை. முகாம்களுக்கு சென்றாலும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி திருப்பி அனுப்புகின்றனர்.கண்துடைப்பாக முகாம் நடத்தாமல், போலீசாரின் பிரச்னைகளை உண்மையாக களைய வேண்டும். முதல்வரின் தனிப்பிரிவை போல், போலீசாரின் மனுக்களை, டி.ஜி.பி., அலுவலகத்தில் பெற்று, பதிவு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி, தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X