பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' பரவல் கட்டுக்குள் வந்ததால் 3,500 களப்பணியாளர்கள் வேலையிழப்பு

Added : அக் 09, 2021
Share
Advertisement
கோவை:கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது மகிழ்ச்சியான செய்திதான். ஆனால், சிலர் இதனால் மிகுந்த வருத்தமடைந்துள்ளனர். அவர்கள்...கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்றை கட்டுப்படுத்த போராடிய களப்பணியாளர்கள்!கோவையில் கொரோனா தொற்று இரண்டாம் அலை, மே மாதத்தில் தீவிரமாக பரவியது. தொற்று பரவலை ஆரம்ப நிலையை கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, 100 வீட்டுக்கு ஒருவர்

கோவை:கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது மகிழ்ச்சியான செய்திதான். ஆனால், சிலர் இதனால் மிகுந்த வருத்தமடைந்துள்ளனர்.
அவர்கள்...கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்றை கட்டுப்படுத்த போராடிய களப்பணியாளர்கள்!
கோவையில் கொரோனா தொற்று இரண்டாம் அலை, மே மாதத்தில் தீவிரமாக பரவியது. தொற்று பரவலை ஆரம்ப நிலையை கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, 100 வீட்டுக்கு ஒருவர் வீதம், 4,000 பேர் நியமிக்கப்பட்டனர். மகளிர் சுய உதவி குழுவினர், கல்லுாரி மாணவ, மாணவியர் பயன்படுத்தப்பட்டனர்.
தினச்சம்பளமாக, 500 ரூபாய் வழங்கப்பட்டது.காலை, 7:00 முதல் மதியம், 1:00 வரை, வீடு வீடாகச் சென்று, வீட்டில் யாருக்கேனும் சளி, காய்ச்சல், இருமல் இருக்கிறதா என கேட்டறிந்தனர். அறிகுறி இருப்பின் மருத்துவ அலுவலர்களுக்கு தெரிவித்தனர். நோய் கட்டுப்பாட்டு மையங்களில் வசிப்போரை தொடர்ந்து கண்காணித்தனர். இவர்களது வேலை, தொற்று பரவல் கட்டுப்படுத்த பெரிதும் உதவியது.
தற்போது, தினசரி பாதிப்பு, 200க்கும் கீழ் குறைந்திருக்கிறது. அதனால், களப்பணியாளர்கள் தேவை குறைந்திருப்பதால், 3,500 பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.வார்டுக்கு, 5 பேர் வீதம், 100 வார்டுகளுக்கு, 500 பேர் மட்டும் பணியாற்றுகின்றனர். இவர்கள் கொரோனா தடுப்பூசி போடும் மையங்களில், 'கோவின்' செயலியில் ஆதார் எண் பதிவு செய்கின்றனர்.
மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் கூறுகையில், 'களப்பணியாளர் தேவை இல்லாததால், ஆக., மாதம், 3,000 பேராக குறைக்கப்பட்டனர். செப்., மாதம், 2,000 பேர் பணிபுரிந்தனர். இப்போது, 500 பேர் போதும் என கூறப்பட்டதால், வார்டுக்கு, 5 பேர் மட்டும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்' என்றனர்.
சம்பளம் நிலுவை இருக்கு!
களப்பணியாளர்களுக்கு, ஆக., - செப்., மாதத்துக்கான சம்பளம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, ஆக., மாதத்துக்கு, 15 நாள் சம்பளம் நேற்று வழங்கப்பட்டது. இன்னும் ஒன்றரை மாத சம்பளம் நிலுவையில் இருக்கிறது.அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்தே, இவர்களுக்கான சம்பளம் வழங்கப்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தில் அந்நிதி விடுவிப்பதில் தாமதம் ஏற்படுவதால், வழங்க முடிவதில்லை' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X