எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தசரா விழா மட்டும் நடத்த கூடாதா? : ஹிந்து அமைப்புகள் போர்க்கொடி

Updated : அக் 10, 2021 | Added : அக் 09, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில், ஆண்டுதோறும் அக்டோபரில் நடக்கும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் என, நான்கு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள், நேர்த்திக் கடனாக பல்வேறு வேடம் அணிந்து, அம்மனை தரிசித்து வழிபடுவர். விழாவின், 10ம் நாளில் கடற்கரையில்
 தசரா விழா ,கூடாதா? , ஹிந்து அமைப்புகள் , போர்க்கொடி

துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில், ஆண்டுதோறும் அக்டோபரில் நடக்கும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் என, நான்கு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள், நேர்த்திக் கடனாக பல்வேறு வேடம் அணிந்து, அம்மனை தரிசித்து வழிபடுவர். விழாவின், 10ம் நாளில் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருக்க, சூரசம்ஹாரம் நிகழ்வு சிறப்பாக நடக்கும். கடந்த ஆண்டு, கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால், தசரா திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை, கோவில் முன் நடத்தி விட்டனர். இதனால், முத்தாரம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்த முடியவில்லையே என்ற கவலையில் இருந்த மக்கள், இந்த ஆண்டாவது சிறப்பாக நடத்தப்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், கொடியேற்ற நிகழ்ச்சிக்கு கூட, பக்தர்களை அனுமதிக்காதது, நான்கு மாவட்ட மக்களையும் கவலைக்கு ஆளாக்கி உள்ளது. இதை எதிர்த்து, பா.ஜ., மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தியுள்ளன. இதுகுறித்து, குலசேகரப்பட்டினம், முத்தாரம்மன் தசரா குழு ஒருங்கிணைப்பு சங்க மாநில செயலர் கனகராஜ் கூறியதாவது: கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும், அரசு தரப்பில் கெடுபிடி காட்டுகின்றனர். பக்தர்களை கோவில் பக்கமே போக விடவில்லை.

விழாவை முன்னிட்டு, பல்வேறு வேடங்களை அணியும் பக்தர்கள், ஏற்கனவே விரதம் இருந்து வருகின்றனர். ஆனால், அவர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்த முடியவில்லை. தசரா விழாவுக்கு பக்தர்களை அனுமதியுங்கள் என்று கேட்டு, அரசுக்கு பல முனைகளில் இருந்தும் அழுத்தம் கொடுத்து விட்டோம். ஆனால், இது ஹிந்து கோவில் என்பதாலேயே, அரசு இறங்கி வர மறுத்து விட்டது. எனினும், புன்னைக்காயல் ஆர்.சி., கிறிஸ்துவ கன்னிமாதா ஆலய பெருவிழா, 3ம் தேதி சிறப்பாக நடந்திருக்கிறது.தேர் பவனியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதை அனுமதிக்கும் அரசு, முத்தாரம்மன் தசரா விழாவுக்கு மட்டும் கெடுபிடி காட்டுவது ஏன்?
இதை சட்டரீதியில் அணுகுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

துாத்துக்குடி மாவட்ட முன்னாள் மேயரும், பா.ஜ., பிரமுகருமான சசிகலா புஷ்பா கூறியதாவது: துாத்துக்குடி மட்டுமல்ல. தமிழகம் முழுதுமே இப்படி தான் நடக்கிறது. வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் கோவில்களில் மட்டும் தரிசனத்திற்கு தடை போட்டுள்ள அரசு அதிகாரிகள், சர்ச்சுகள், மசூதிகளில் பிராத்தனை மற்றும் தொழுகைக்கு அனுமதிக்கின்றனர். முத்தாரம்மன் கோவில் தசரா விழாவுக்கு கெடுபிடி காட்டி, மக்கள் பங்கேற்க முடியாத சூழலை உருவாக்குவது, மக்கள் சாபம் மட்டுமல்ல, கடவுள் சாபத்தையும் சேர்த்து வாங்குவது போன்றதாகும். இவ்வாறு அவர் கூறினார். இப்பிரச்னை தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட தயாராவதாக, பா.ஜ., தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் எச்.ராஜா கூறினார்.


'தேர் பவனி குறித்துதகவல் தெரியாது'- புன்னைக்காயல் பகுதி இடம் பெற்றுள்ள, திருச்செந்துார் கோட்டாட்சியர் கோகிலா கூறியதாவது:கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால், கோவில் விழாக்களுக்கு அனுமதி கொடுப்பதில்லை. புன்னைக்காயலில் கிறிஸ்துவ தேர் பவனிக்கும் அனுமதி கொடுக்கவில்லை. ஆயிரக்கணக்கான பக்தர்களை கூட்டி, தேர் பவனி நடத்தியது குறித்து எங்களுக்கு தகவல் இல்லை. அப்படி நடந்திருந்தால், அது தவறு தான். சட்டத்துக்கு விரோதமானது தான். இருந்தாலும், என்ன நடந்தது என்பதை அறிவதற்காக, சம்பந்தப்பட்ட பகுதி தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்கிறேன். சம்பவம் நடந்தது உண்மை என்றால் நடவடிக்கை குறித்து ஆலோசிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.


'கடந்த ஆண்டு நடந்தது'கொரோனா விதிகளையும், கட்டுப்பாடுகளையும் முழுமையாக பின்பற்றி தான் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை எடுக்கிறது. இங்கே, ஹிந்து, கிறிஸ்துவ மத வேறுபாடு கிடையாது. அனுமதியோ, மறுப்போ எல்லாருக்கும் ஒரே மாதிரி தான். வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

மற்ற நாட்களில் யார் வேண்டுமானாலும், கோவிலுக்கு போகலாம்; சாமியை தரிசிக்கலாம்; எந்த தடையும் இல்லை. அந்த மூன்று நாட்களில் கோவில், சர்ச், மசூதியில் யாருக்கும் அனுமதி இல்லை. முத்தாரம்மன் கோவில் விழாவிலும், இந்த நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது. புன்னைக்காயலில் கிறிஸ்துவ தேர் பவனி குறித்து, எனக்கும் தகவல் வந்தது. அந்த நிகழ்வு கடந்த ஆண்டு நடந்தது. அதை இப்போது, சிலர் சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இருந்தாலும், இந்த விஷயங்களில் கவனமாக இருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்துகிறேன்.-செந்தில்ராஜ், துாத்துக்குடி கலெக்டர். - நமது நிருபர் --

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
11-அக்-202114:55:32 IST Report Abuse
ganapati sb வெள்ளி சனி ஞாயிறில் திருவிழாக்களில் ஆலயம் செல்லாமல் சினிமாவுக்கும் டாஸ்மாக்கும் செல்ல மறைமுக திட்டம் கொண்டு செயல்படும் நாத்திக அரசு நவராதிரியிலிருந்தாவது திருந்த வேண்டும்
Rate this:
Cancel
10-அக்-202115:19:01 IST Report Abuse
Ram Pollachi அய்யா உண்டு
Rate this:
Cancel
Bala - chennai,இந்தியா
10-அக்-202113:50:30 IST Report Abuse
Bala 'தேர் பவனி குறித்துதகவல் தெரியாது' விளங்கிடும் விடியல் ஆட்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X