பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

Added : அக் 09, 2021
Share
Advertisement
சென்னை:மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.மாற்றுத் திறனாளிகள் தன்னிச்சையாக செயல்பட, 24 வகையான உதவி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு நடப்பு நிதியாண்டில், 62.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அதேபோல, 2020 - 21ம் ஆண்டில் விண்ணப்பித்து, காத்திருப்போர் பட்டியலில் இருந்த, 10 ஆயிரத்து, 107 பேர் கோரிக்கையை நிறைவேற்ற, 21.11 கோடி ரூபாய்

சென்னை:மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

மாற்றுத் திறனாளிகள் தன்னிச்சையாக செயல்பட, 24 வகையான உதவி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு நடப்பு நிதியாண்டில், 62.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அதேபோல, 2020 - 21ம் ஆண்டில் விண்ணப்பித்து, காத்திருப்போர் பட்டியலில் இருந்த, 10 ஆயிரத்து, 107 பேர் கோரிக்கையை நிறைவேற்ற, 21.11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதில், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட, 'பெட்ரோல் ஸ்கூட்டர்' கேட்டு விண்ணப்பித்த, 1,228 மாற்றுத் திறனாளிகளுக்கு, ஸ்கூட்டர்களுக்கான சாவியை முதல்வர் வழங்கினார். கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, பராமரிப்பு உதவித் தொகையாக, மாதம்தோறும், 1,500 ரூபாய், அவர்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் இதுநாள் வரை, பராமரிப்பு உதவித்தொகை கேட்டு, காத்திருப்போர் பட்டியலில் இருந்த, 9,173 பேருக்கு வழங்க, 29.64 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகைக்கான காசோலைகளையும் முதல்வர் வழங்கினார்.

மேலும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில், பணியின் போது இறந்த, நான்கு பேரின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில், மூன்று இளநிலை உதவியாளர், ஒரு அலுவலக உதவியாளர் பணி வழங்கப்பட்டது. இதற்கான நியமன ஆணைகளை, முதல்வர் நேற்று வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் இறையன்பு, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலர் லால்வேனா, இயக்குனர் ஜானி டாம் வர்கீஸ் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X