பொது செய்தி

தமிழ்நாடு

வங்க கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி?

Added : அக் 09, 2021
Share
Advertisement
சென்னை:'மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில், இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது' என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:வளி மண்டல மேலடுக்குசுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, அரியலுார், பெரம்பலுார், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில்,

சென்னை:'மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில், இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது' என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:வளி மண்டல மேலடுக்குசுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, அரியலுார், பெரம்பலுார், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்கள்மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.

நாளை நீலகிரி, கோவை, சேலம், திருவண்ணாமலை, அரியலுார், பெரம்பலுார், திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்கள்,புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், இடி மின்னலுடன் மிதமானமழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை, 34; குறைந்தபட்ச வெப்பநிலை, 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, கரூர், பெரம்பலுார் மாவட்டம், அகரம் சீகூர்; கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதியில், தலா 10 செ.மீ., மழை பெய்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில், இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இன்றும், நாளையும் தெற்கு வங்க கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில், மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில், பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.மேலும் விபரங்களுக்கு, imdchennai.gov.in என்ற இணையதளத்தை காணவும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X