கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'டிரெய்லர்' லாரிகளை கண்காணிக்க குழு: ஐகோர்ட்

Added : அக் 09, 2021
Share
Advertisement
சென்னை,:சென்னையில் அதிக பாரம் ஏற்றும், 'டிரெய்லர்'லாரிகளை கண்காணித்து, நடவடிக்கை எடுப்பதற்கு வழிமுறைகள் வகுக்கவும், அவை பின்பற்றப்படுவதை கண்காணிக்க குழு அமைக்கவும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.துறைமுகத்துக்கு அதிக பாரம் ஏற்றி வரும் டிரெய்லர் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் ஏற்படுவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சென்னை,:சென்னையில் அதிக பாரம் ஏற்றும், 'டிரெய்லர்'லாரிகளை கண்காணித்து, நடவடிக்கை எடுப்பதற்கு வழிமுறைகள் வகுக்கவும், அவை பின்பற்றப்படுவதை கண்காணிக்க குழு அமைக்கவும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துறைமுகத்துக்கு அதிக பாரம் ஏற்றி வரும் டிரெய்லர் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் ஏற்படுவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:

சென்னை நகருக்குள் அதிக பாரம் ஏற்றி செல்லும் டிரெய்லர் லாரிகளால் ஏற்படும் இடையூறுகளை, இந்த வழக்கு விவரிக்கிறது. பல இடங்களில் சாலை வலுவிழந்து உள்ளது; அதிக பாரம் தாங்காது, சாலை கீழே அமுங்குகிறது. இதனால், பேரழிவு ஏற்படுகிறது. இதுபோன்ற வழக்கில், உச்ச நீதிமன்றம் சில வழிமுறைகளை வழங்கியது. ஆனால், வழிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய கண்காணிப்பும் அவசியம்.

எனவே, போக்குவரத்து ஆணையர், வடசென்னை போக்குவரத்து போலீஸ் துணை ஆணையர், துறைமுக கழக போக்குவரத்து மேலாளர் அடங்கிய கூட்டத்தை, உடனடியாக துறைமுக பொறுப்பு கழக தலைவர் கூட்ட வேண்டும்.இதில், ஒரு குழு அமைக்கவும், அதிக பாரம் ஏற்றும் டிரெய்லர் லாரிகளை கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கவும், வழிமுறைகள் வகுப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்.

வடிவமைக்கப்பட்ட வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதற்கு, குழு தான் பொறுப்பேற்க வேண்டும். நீதிமன்றமும், இதில் ஏற்படும் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்கும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வரும் 27க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X