பொது செய்தி

தமிழ்நாடு

உரம் பதுக்கலா? கடைகளில் சோதனை!

Added : அக் 09, 2021
Share
Advertisement
சென்னை:விதிகளை பின்பற்றாத 101 உரக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வேளாண் துறை தெரிவித்துள்ளது.அரசு செய்திக் குறிப்பு:உர விற்பனை தொடர்பாக, விவசாயிகளுக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளை களைவதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும், வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பு மையம் செயல்படுகிறது.அந்த மையத்தை விவசாயிகள் தொடர்பு கொண்டு, உரம் தொடர்பான புகார்களை பதிவு

சென்னை:விதிகளை பின்பற்றாத 101 உரக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வேளாண் துறை தெரிவித்துள்ளது.

அரசு செய்திக் குறிப்பு:உர விற்பனை தொடர்பாக, விவசாயிகளுக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளை களைவதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும், வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பு மையம் செயல்படுகிறது.அந்த மையத்தை விவசாயிகள் தொடர்பு கொண்டு, உரம் தொடர்பான புகார்களை பதிவு செய்து வருகின்றனர். விவசாயிகள் தெரிவிக்கும் புகார்கள் மீது, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் தமிழகம் முழுதும், 3,391 தனியார் உரக் கடைகளில், வேளாண்மை துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது, புத்தக இருப்புக்கும், உண்மை இருப்புக்கும் வித்தியாசம் காணப்பட்ட 84 உரக் கடைகளின் உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. உரம் இருப்பு மற்றும் விற்பனை விலை குறித்த தகவல் பலகையை பராமரிக்காத, 16 உரக் கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கணக்கில் வராத, கூடுதலாக உரம் இருப்பு வைத்துள்ள உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மானிய உரங்களை, விற்பனை முனைய கருவியில் பட்டியலிட்டு, விற்பனை செய்யாத ஒரு உரக் கடை மீது, எம்.எப்.எம்.எஸ்., குறியீட்டு எண் தடை செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

மேலும், அரசு வழிகாட்டுதல் முறைகளின்படி, உரங்களை விற்பனை முனைய கருவி வழியாக, விவசாயிகளின் ஆதார் எண்ணை பயன்படுத்தி விற்பனை செய்ய வேண்டும். நிர்ணயம் செய்த விலையில் மட்டுமே உரங்கள் விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இதை பின்பற்றாமல் விற்றால், உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் கிடைக்க, உரக் கடைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X