பொது செய்தி

தமிழ்நாடு

சீன கொள்முதலால் பாமாயில் விலை 'கிடு கிடு'

Added : அக் 09, 2021
Share
Advertisement
சென்னை:சீனாவின் மொத்த கொள்முதல் உள்ளிட்ட காரணங்களால், எப்போதும் இல்லாத வகையில், ஒரு வாரத்தில் மட்டும் பாமாயில் விலை லிட்டருக்கு 7 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.நாட்டின் மொத்த சமையல் எண்ணெய் தேவை 2.60 கோடி டன். அதில், இறக்குமதி செய்யப்படும் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் வகைகளின் பங்கு 1.70 கோடி டன். மொத்த இறக்குமதியில் பாமாயில் மட்டும் 90 சதவீதம் என்றளவில் உள்ளது.இதனால்,

சென்னை:சீனாவின் மொத்த கொள்முதல் உள்ளிட்ட காரணங்களால், எப்போதும் இல்லாத வகையில், ஒரு வாரத்தில் மட்டும் பாமாயில் விலை லிட்டருக்கு 7 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

நாட்டின் மொத்த சமையல் எண்ணெய் தேவை 2.60 கோடி டன். அதில், இறக்குமதி செய்யப்படும் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் வகைகளின் பங்கு 1.70 கோடி டன். மொத்த இறக்குமதியில் பாமாயில் மட்டும் 90 சதவீதம் என்றளவில் உள்ளது.இதனால், பாமாயில் தேவை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. மலேஷியா, இந்தோனேஷியாவில் இருந்து பாமாயில்; ரஷ்யா, உக்ரைனில் இருந்து சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.

தற்போது, சீனாவில் கடும் மின் வெட்டு நிலவுவதால், அந்நாட்டில் பல தொழிற்சாலைகள் செயல்படவில்லை. சர்வதேச சந்தைஅந்நாட்டில் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் ஆலைகள், மலேஷியாவில் இருந்து பாமாயிலை மொத்தமாக கொள்முதல் செய்து வருவதால், சர்வதேச சந்தையில் பாமாயில் விலை அதிகரித்துள்ளது.இதையடுத்து, உள்நாட்டில் 10 நாட்களில் மட்டும் மொத்த விலையில், லிட்டர் பாமாயில் விலை, 7 ரூபாய் வரை அதிகரித்து 119 ரூபாய் முதல் 126 ரூபாய் என்றளவில் உள்ளது.

இது, கொரோனா தொற்று பரவலுக்கு முன் 70 முதல் 85 ரூபாயாக இருந்தது.இதேகாலத்தில், 85 - 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் விலை தற்போது 150 ரூபாயை எட்டியுள்ளது. அதேசமயம், உள்நாட்டில் உற்பத்தியாகும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் விலைகள் உயரவில்லை. அவற்றின் விலை முறையே லிட்டர் 175 ரூபாய்; 245 ரூபாய்; 180 ரூபாய் என்றளவில் உள்ளன.ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாமாயில் விலை கிடுகிடுவென அதிகரித்து வருவது, பலரையும் கவலை அடைய செய்துள்ளது.

இதுகுறித்து, மதுரை எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்கள் சங்க முன்னாள் செயலர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:ஏழை மக்களின் வரப்பிரசதமாக திகழும் பாமாயில் தேவை, இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது.சூரியகாந்தி எண்ணெய்சீனாவின் மொத்த கொள்முதல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், உள்நாட்டில் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.

மலேஷியா, இந்தோனேஷியா நாடுகள், இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் நில பரப்பை தான் கொண்டுள்ளன. சிறிய நாடுகள், உலக தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பாமாயில் உற்பத்தி செய்கின்றன. ஆனால், இந்தியாவில் உற்பத்தி குறைவாக உள்ளது.எனவே, பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியை குறைக்க, உள்நாட்டில் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X