போலீஸ் விசாரணைக்கு ஆஜரான மத்திய அமைச்சர் மகன்.. கைது

Updated : அக் 10, 2021 | Added : அக் 09, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
லக்கிம்பூர் : உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடந்த வன்முறை தொடர்பான விவகாரத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன், ஆஷிஷ் மிஸ்ரா நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள லக்கிம்பூரில் சமீபத்தில் பா.ஜ., கூட்டத்துக்கு ஏற்பாடு
போலீஸ் விசாரணை, மத்திய அமைச்சர், மகன்  கைது

லக்கிம்பூர் : உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடந்த வன்முறை தொடர்பான விவகாரத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன், ஆஷிஷ் மிஸ்ரா நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.


உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள லக்கிம்பூரில் சமீபத்தில் பா.ஜ., கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார், கூட்டத்துக்குள் புகுந்தது. மத்திய உள்துறை இணைஅமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, அந்தக் காரில் இருந்ததாக கூறப்படுகிறது.


வன்முறைஇதையடுத்து, அங்கு நடந்த வன்முறையில் நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். அதில், தனியார் 'டிவி' நிருபர் மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்த மூவர் அடங்குவர்.வன்முறையில் எட்டு பேர் இறந்தது தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா உட்பட சிலர் மீது, போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்தனர்.


'நோட்டீஸ்'இது தொடர்பான விசார ணைக்கு ௮ம் தேதி ஆஜராகும்படி ஆஷிஷ் மிஸ்ராவுக்கு போலீசார் 'சம்மன்' அனுப்பினர்; ஆஷிஷ் மிஸ்ரா ஆஜராகவில்லை. இதையடுத்து, நேற்று ஆஷிஷ் மிஸ்ரா கட்டாயம் ஆஜராகக் கோரி, அவரது வீட்டில் போலீசார்'நோட்டீஸ்' ஒட்டினர். இதற்கிடையே, லக்கிம்பூர் சம்பவம் பற்றி தானாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதாவது: இந்த வழக்கில் உ.பி., அரசும், போலீசாரும் எடுத்த நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை. யார் தவறு செய்திருந்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டம் கடமையைச் செய்யும்.இவ்வாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


கைது


இந்நிலையில், லக்கிம்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று காலை வந்த ஆஷிஷ் மிஸ்ரா, போலீசார் முன் ஆஜரானார். அவரிடம், டி.ஐ.ஜி., உபேந்திர அகர்வால் தலைமையில் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதையடுத்து, நள்ளிரவு 11:00 மணிக்கு ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து, டி.ஐ.ஜி., உபேந்திர அகர்வால் கூறியதாவது:ஆஷிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. பல கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து விட்டார். அவரை கைது செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். இதனால், உ.பி., அரசியலில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.


பதிலுக்கு பதில்லக்கிம்பூர் வன்முறை பற்றி பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் கூறியதாவது:லக்கிம்பூரில் உ.பி., துணை முதல்வர் மவுர்யா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார், விவசாயிகள் மீது மோதியது. இதனால் விவசாயிகளிடம் ஏற்பட்ட கோபம் வன்முறையாக மாறியது. வன்முறையில் பலியானது யாராக இருந்தாலும் வருந்தத்தக்க விஷயம் தான். எனினும் கார் மோதல் காரணமாகவே இந்த வன்முறை ஏற்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


சித்து உண்ணாவிரதம் முடிவுலக்கிம்பூர் வன்முறை சம்பவத்தை கண்டித்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். வன்முறையை வீடியோ எடுத்த பத்திரிகையாளர் கொல்லப்பட்ட நிலையில், அவரது வீட்டில் சித்துவின் போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில், நேற்று காலை போலீசார் முன் ஆஷிஸ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜரானதையடுத்து, உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக சித்து அறிவித்தார்.


அமைச்சரை கைது செய்ய கோரிக்கைவிவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு தலைமை தாங்கும் 'சம்யுக்த கிசான் மோர்ச்சா' அமைப்பு, லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:லக்கிம்பூரில் நடந்த தாக்குதல் திட்டமிட்ட சதிச் செயல்.

இந்த தாக்குதல் தொடர்பாக, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், வரும் ௧௧ம் தேதி லக்கிம்பூரில் 'தியாகிகள் யாத்திரை' நடத்துவோம். கொல்லப்பட்ட விவசாயிகளின் ஆன்மா சாந்தியடைய, ௧௨ம் தேதி சிறப்பு வழிபாடு நடத்துவோம். விஜயதசமி நாளன்று விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உருவ பொம்மைகளை எரிப்போம். அக்., ௧௮ம் தேதி, நாடு முழுதும் ரயில் மறியல் போராட்டமும், ௨௬ல் லக்னோவில் மஹா பஞ்சாயத்தும் நடத்தப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-அக்-202116:36:03 IST Report Abuse
தேச பக்தன் அரசியல் அமைப்பு சட்டப்படி போராட்டம் நடத்த உரிமை உள்ளது, நடத்தி கொண்டு தான் உள்ளனர். இப்போது ஏன் போராட்டத்தை பிஜேபி நடத்தும் கூட்டத்திற்கு எதிராக நடத்துகிறார்கள், வேண்டும் என்றே கலகம் ஏற்படுத்த தான். அரசியல் அமைப்பு சட்டப்படி பிஜேபிக்கும் கூட்டம் நடத்த உரிமை உள்ளது. இதன் பின்னால் காலிஸ்தான் இயக்கம் உள்ளதாக செய்தி வருகிறது.கோர்ட், உங்கள் போராட்டம் தனியாக உங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் நடக்க வேண்டும், பிர கட்சிகள் கூட்டம் நடத்தும் இடத்தில் போராட்டம் நடத்த கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கனும்.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
10-அக்-202111:15:13 IST Report Abuse
J.Isaac மலரின் மகள் : உண்மையான பெயர் என்னவோ? போட பயமா?
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
10-அக்-202116:19:12 IST Report Abuse
Sanny அவங்க பெயர் உனக்கு எதுக்கு முக்கியம், அவங்க கருத்துக்கு பதில் போடு....
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
10-அக்-202110:48:28 IST Report Abuse
duruvasar கடலூர் எம்பி இன்னும் ஆஜராகவேயில்லையே சாமி. இந்த விஷயத்தில் எல்லா அரசியல்வாதியும் ஒரே ஜாதிதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X