சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., - எம்.பி., மீது கொலை வழக்கு பண்ருட்டி தொழிலாளி சாவில் 5 பேர் கைது

Added : அக் 09, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கடலுார்:முந்திரி தொழிலாளி கொலை செய்யப்பட்டது உறுதியானதால், கடலுார் தி.மு.க., - எம்.பி., ரமேஷ் உள்ளிட்ட ஆறு பேர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. எம்.பி.,யின் உதவியாளர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பத்தில், கடலுார் தொகுதி தி.மு.க., - எம்.பி., ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை உள்ளது. அங்கு பணிபுரிந்த மேல்மாம்பட்டு
 தி.மு.க., - எம்.பி., மீது கொலை வழக்கு பண்ருட்டி தொழிலாளி சாவில் 5 பேர் கைது

கடலுார்:முந்திரி தொழிலாளி கொலை செய்யப்பட்டது உறுதியானதால், கடலுார் தி.மு.க., - எம்.பி., ரமேஷ் உள்ளிட்ட ஆறு பேர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. எம்.பி.,யின் உதவியாளர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பத்தில், கடலுார் தொகுதி தி.மு.க., - எம்.பி., ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை உள்ளது. அங்கு பணிபுரிந்த மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசு, 55 என்ற தொழிலாளி, செப்., 19ல் மர்மமான முறையில் இறந்தார். 'என் தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார்.

வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். 'ஜிப்மர் டாக்டர் முன்னிலையில், பிரேத பரிசோதனை நடத்த வேண்டும்' என, கோவிந்தராசு மகன் செந்தில்வேல், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.ஐகோர்ட் உத்தரவுப்படி ஜிப்மர் டாக்டர்கள் குழுவினர் முன்னிலையில், செப்., 23ல், விழுப்புரம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.


விசாரணை



வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., கூடுதல் டி.எஸ்.பி., கோமதி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜ், தீபா ஆகியோர் செப்., 28ல் விசாரணையை துவக்கினர். காடாம்புலியூர் போலீசார், கோவிந்தராசு மகன் செந்தில்வேல் ஆகியோரிடம் விசாரணை நடந்தது.

முந்திரி தொழிற்சாலையில் இருந்து கோவிந்தராசுவை காடாம்புலியூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்த 'சிசிடிவி' காட்சிகளை சி.பி.சி.ஐ.டி., போலீசார் சேகரித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், கோவிந்தராசு அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. சி.பி.சி.ஐ.டி., விசாரணையிலும் கொலை உறுதியானது. இதையடுத்து, சந்தேக மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கொலை வழக்காக மாற்றினர்.ரமேஷ் எம்.பி., அவரது உதவியாளர் நடராஜன், முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல் மற்றும் அல்லாபிச்சை, சுந்தர்ராஜ், வினோத் ஆகியோர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது.


ஆஜர்

ரமேஷ் எம்.பி., தலைமறைவான நிலையில், மற்ற ஐந்து பேரையும் கைது செய்தனர். நேற்று அதிகாலை வரை, கடலுார் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.நேற்று அதிகாலை 5:00 மணியளவில், கடலுார் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி, ஐந்து பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். எம்.பி.,யை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nanban - Kajang,மலேஷியா
10-அக்-202109:16:10 IST Report Abuse
Nanban தமிழக மக்களுக்கு இது பத்தாது தி மு க ரவுடி கட்சி என்று தெரிந்தும் வோட்டு போட்டால் இது தான் நிலைமை.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
10-அக்-202102:44:46 IST Report Abuse
BASKAR TETCHANA எம்.பி.யை காணவில்லையா. அம்மா கோமதி மேடம் எப்படியாவது அந்த எம்.பி.யை கண்டு பிடித்து பொலிஸாரின் மானத்தை காப்பாற்றுங்கள். சைலேந்திரபாபு வுக்கு பெருமை சேர்த்து கொடுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X