அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணிக்கை இணையதளங்களில் ஒளிபரப்ப கோரிக்கை

Added : அக் 09, 2021
Share
Advertisement
சென்னை:'ஊரக உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை, இணையதளங்களில் ஒளிபரப்ப வேண்டும்' என்று அ.தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது.அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு இணை செயலர் பாபுமுருகவேல், மாநில தேர்தல் ஆணையரிடம் அளித்துள்ள மனு:ஊரக உள்ளாட்சி தேர்தல், இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு முடிந்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை, 12ம் தேதி நடக்க உள்ளது. அதுவரை ஓட்டுப் பெட்டிகள் வைக்கப்படும் அறைக்கு,

சென்னை:'ஊரக உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை, இணையதளங்களில் ஒளிபரப்ப வேண்டும்' என்று அ.தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது.

அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு இணை செயலர் பாபுமுருகவேல், மாநில தேர்தல் ஆணையரிடம் அளித்துள்ள மனு:ஊரக உள்ளாட்சி தேர்தல், இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு முடிந்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை, 12ம் தேதி நடக்க உள்ளது. அதுவரை ஓட்டுப் பெட்டிகள் வைக்கப்படும் அறைக்கு, மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அறையின் வெளிப்பகுதியில், 'வெப் கேமரா' பொருத்தி, அங்கு நடப்பதை கட்சியினர் பார்க்கும் வசதி ஏற்படுத்த வேண்டும்.ஓட்டு எண்ணிக்கை நடக்கும் மையங்களில், வெப் கேமரா பொருத்தி, ஓட்டு எண்ணிக்கையை இணையதளங்களில் ஒளிபரப்ப வேண்டும். எண்ணிக்கை முடிந்ததும் தேர்தல் முடிவுகளை தாமதப்படுத்தாமல் வெளியிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X