சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மச்சாவரம் சுதாகர் வீட்டில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை

Updated : அக் 11, 2021 | Added : அக் 09, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை,: தலிபான் பயங்கரவாதிகளுடன் இணைந்து, 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3,000 கிலோ போதைப் பொருள் கடத்திய வழக்கில் கைதான, மச்சாவரம் சுதாகர் வசித்த சென்னை வீட்டில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் பல மணி நேரம் சோதனை நடத்தினர்; 'லேப்டாப்' உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.சமீபத்தில், ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக, குஜராத் முந்த்ரா துறைமுகத்திற்கு சரக்கு கப்பலில்
 மச்சாவரம் சுதாகர் வீட்டில்  என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை

சென்னை,: தலிபான் பயங்கரவாதிகளுடன் இணைந்து, 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3,000 கிலோ போதைப் பொருள் கடத்திய வழக்கில் கைதான, மச்சாவரம் சுதாகர் வசித்த சென்னை வீட்டில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் பல மணி நேரம் சோதனை நடத்தினர்; 'லேப்டாப்' உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

சமீபத்தில், ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக, குஜராத் முந்த்ரா துறைமுகத்திற்கு சரக்கு கப்பலில் கடத்தப்பட்ட, 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3,000 கிலோ போதைப் பொருளை, டி.ஆர்.ஐ., எனப்படும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


போதை பொருள் கடத்தல்விசாரணையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள, 'ஆஷி டிரேடிங்' கம்பெனிக்கு, 'முக பவுடர்' என எழுதப்பட்ட பார்சலில் போதைப் பொருள் கடத்தப்பட்டது தெரிய வந்தது.ஆஷி டிரேடிங் கம்பெனியை, தன் மாமியார் பெயரில் நடத்தி வந்த மச்சாவரம் சுதாகர், 45, அவரது மனைவி துர்கா பூரண வைஷாலி, 39, ஆகியோர், சென்னை போரூர் அருகே, கொளப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி வீட்டில் வசிப்பதும் தெரிய வந்தது.
'ஐ.இ.கோட்' என்ற இறக்குமதி ஏற்றுமதி உரிமம் பெற்றிருந்த சுதாகர், போதைப் பொருளை, டில்லியில் உள்ள அமித் என்பவருக்கு அனுப்ப முயன்றதை டி.ஆர்.ஐ., அதிகாரிகள் கண்டறிந்தனர். போதைப் பொருள் தொடர்பாக, தலிபான் பயங்கரவாதிகள் நான்கு பேர், உஸ்பெகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர், மச்சாவரம் சுதாகர், துர்கா பூரண வைஷாலி உட்பட எட்டுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட, ஆப்கானிஸ்தானை சேர்ந்த முக்கிய புள்ளி மற்றும் மொழிபெயர்ப்பாளரும் சிம்லாவில் கைது செய்யப்பட்டனர்.இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.சர்வதேச பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதால், இந்த வழக்கை இரு தினங்களுக்கு முன், மத்திய உள்துறை அமைச்சகம், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைத்தது.இதையடுத்து, டில்லி மற்றும் கேரளாவில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ., அதிகாரிகள், நேற்று காலை 9:30ல் இருந்து பல மணி நேரம், கொளப்பாக்கத்தில் சுதாகர், அவரது மனைவி வசித்து வரும் வீட்டை முழுமையாக சோதனையிட்டனர்.


முக்கிய புள்ளிகள்பீரோ, கட்டில் என ஒரு இடம் விடாமல் சோதனை நடந்தது. இதில், மூன்று 'லேப்டாப்'கள் மற்றும் ஆவணங்கள் சிக்கி உள்ளன.அவற்றில், சென்னை, கோவை, ஆந்திரா மற்றும் கோவாவை சேர்ந்த முக்கிய புள்ளிகளுக்கு, போதைப் பொருள் 'சப்ளை' செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. சோதனை முழுதும், 'வீடியோ' பதிவு செய்யப்பட்டுள்ளது.தம்பதியின் வங்கிக் கணக்குகளையும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சோதனையில் சிக்கிய ஆதாரங்களின் அடிப்படையில், முக்கிய புள்ளிகளின் வீடுகளில் சோதனை நடத்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


கோவையில் 'ரெய்டு'இந்த வழக்கில் கோவையைச் சேர்ந்த ராஜ்குமார், 45, என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று மும்பையில் இருந்து கோவை வந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் மூவர், கோவை வடவள்ளி, மருத மலை பிரதான சாலை ராமசாமி நகரில் உள்ள ராஜ்குமாரின் சகோதரர் வீட்டில் சோதனை நடத்தினர்.அந்த வீட்டில் தற்போது ராஜ்குமாரின் தாய் வசிக்கிறார். ஹெராயின் கடத்தல் வழக்கு தொடர்பு குறித்த ஆவணங்கள் கிடைக்குமா என சோதனை நடத்தினர். சோதனையில் குறிப்பிட்ட ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை.இதையடுத்து, அங்கிருந்த லேப்டாப், மொபைல் போன், வங்கிக் கணக்கு ஸ்டேட்மென்ட் ஆகியவற்றை கைப்பற்றிச் சென்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravikumark - Chennai,இந்தியா
10-அக்-202117:26:05 IST Report Abuse
ravikumark Like how police arrested Sharuk son despite the actor's cult status...can we have the courage and guts to arrest whoever is involved irrespective of their status and position in the society?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
10-அக்-202111:45:56 IST Report Abuse
duruvasar அம்பை எய்தவனை பிடியுங்கள். ஏற்கனவே அதானி என மடை மாற்றம் ஓடிக்கொண்டிருக்கிறது. குஜராத் துறைமுகம் என்பதே மடைமாற்றத்தின் ஆரம்ப புள்ளிதான்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
10-அக்-202108:24:45 IST Report Abuse
Kasimani Baskaran இளைய சமுதாயத்தையே சீரழிக்கக்கூடிய போதைப்பொருள்களை விற்று அதன்மூலம் ஈட்டப்பட்ட பணம் தீவிரவாதம் செய்ய பயன்படுகிறது. ஆகவே இந்த இரு முகம் கொண்ட கத்தியை கையாள்வது சிரமமான காரியம். சம்பந்தப்பட்டவர்களை உடனே தூக்கில் போடுவதே சிறந்த வழி.
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
10-அக்-202113:35:11 IST Report Abuse
pradeesh parthasarathyஎன்னது அடானியை தூக்கில் போடவா... அப்புறம் பிஜேபி க்கு யாரு பைனான்ஸ் பண்ணுவாங்க .... எப்படியோ நல்லாயிருக்கு .... பத்தயிரம் வாடகை வீட்டில இருப்பவன் கொண்டு வரக்கூடிய பொருளா இது ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X