பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் உழவு பணிகள் தீவிரம்

Added : அக் 09, 2021
Share
Advertisement
பரமக்குடி--பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் உழவு பணிகள்தீவிரம் அடைந்துள்ள நிலையில், தடைசெய்யப்பட்ட களைக்கொல்லி மருந்து சில கடைகளில் விற்பனை செய்வதால் மண் வளம் குன்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பரமக்குடி, போகலூர், நயினார்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான விளை நிலங்களில் உழவு பணி தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பரமக்குடி, நயினார்கோவில்

பரமக்குடி--பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் உழவு பணிகள்தீவிரம் அடைந்துள்ள நிலையில், தடைசெய்யப்பட்ட களைக்கொல்லி மருந்து சில கடைகளில் விற்பனை செய்வதால் மண் வளம் குன்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பரமக்குடி, போகலூர், நயினார்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான விளை நிலங்களில் உழவு பணி தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பரமக்குடி, நயினார்கோவில் பகுதிகளில் மழை பெய்துள்ளது.தற்போது வெண்டைக்காய், கத்தரி, பூசணி உள்ளிட்ட பயிர்கள் ஓரளவிற்கு விவசாயிகளுக்கு கைகொடுக்கிறது. இவற்றில் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தும் நோக்கில் விவசாயிகள் பரமக்குடியில் உள்ள மருந்து கடைகளில் களைக் கொல்லி மருந்து வாங்கிச் செல்கின்றனர்.அரசால் தடைசெய்யப்பட்ட மருந்து விற்பனை சில கடைகளில் அமோகமாக நடக்கிறது. செடிகளில் உள்ள பூச்சிகளின் தாக்குதல் குறையும் நிலையில், அவற்றை பயன்படுத்தும் விவசாயிகள் மற்றும் காய்களை உண்ணும் மக்கள் பல்வேறு நோய்க்கு ஆளாகும் நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது.கடந்த வாரங்களில் விதை ஆய்வு அலுவலர்கள், பரமக்குடியில் சோதனை மேற்கொண்டனர். இதேபோல் பூச்சிக் கொல்லி மருந்துகளின் விற்பனை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களை நோய்களிலிருந்து காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X