கல்வி, தனிநபர், தொழில் கடன் வழங்க  சிறப்பு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி, தனிநபர், தொழில் கடன் வழங்க  சிறப்பு முகாம்

Added : அக் 09, 2021
Share
ராமநாதபுரம்--மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் தொழில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் அக்.,11 (நாளை) முதல் 26 வரை நடக்கிறது.மாவட்டத்திலுள்ள தாசில்தார் அலுவலகங்களில் அக்.,11ல் திருவாடானை, அக்.,12ல் ஆர்.எஸ்.மங்கலம், அக்.,20ல் கடலாடி, அக்.,21ல் கமுதி, அக்.,22ல் பரமக்குடி, அக்.,25ல் கீழக்கரை, அக்.,26 ல்

ராமநாதபுரம்--மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் தொழில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் அக்.,11 (நாளை) முதல் 26 வரை நடக்கிறது.மாவட்டத்திலுள்ள தாசில்தார் அலுவலகங்களில் அக்.,11ல் திருவாடானை, அக்.,12ல் ஆர்.எஸ்.மங்கலம், அக்.,20ல் கடலாடி, அக்.,21ல் கமுதி, அக்.,22ல் பரமக்குடி, அக்.,25ல் கீழக்கரை, அக்.,26 ல் ராமேஸ்வரத்தில் நடக்கிறது. விருப்பமுள்ள சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் தங்களது ஆதார்அட்டை, ரேஷன்கார்டு நகல்கள், ஜாதி, வருமானம், இருப்பிட சான்று மற்றும் கல்விக்கடன், தனிநபர் கடன், தொழில் கடன் பெறுவதற்குரிய விபரம், திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவுவங்கி, நகர கூட்டுறவு வங்கிகளை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர்(பொ) காமாட்சி கணேசன் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X