அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வரின் 'கான்வாய்' வாகனங்கள் குறைப்பு

Added : அக் 09, 2021
Share
Advertisement
சென்னை:முதல்வர் ஸ்டாலின் பயணத்தின் போது, உடன் செல்லும், 'கான்வாய்' வாகனங்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.பிரதமர் மற்றும் முதல்வர் உள்ளிட்ட, வி.வி.ஐ.பி.,க்கள் செல்லும் வழிகளில், பொது போக்குவரத்து நிறுத்தப்படும். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுவர்.சிவாஜி கணேசன்சில தினங்களுக்கு முன், மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள்

சென்னை:முதல்வர் ஸ்டாலின் பயணத்தின் போது, உடன் செல்லும், 'கான்வாய்' வாகனங்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மற்றும் முதல்வர் உள்ளிட்ட, வி.வி.ஐ.பி.,க்கள் செல்லும் வழிகளில், பொது போக்குவரத்து நிறுத்தப்படும். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுவர்.சிவாஜி கணேசன்சில தினங்களுக்கு முன், மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் விழாவை ஒட்டி, சென்னை அடையாறில் அவரது மணிமண்டபத்தில் நிகழ்ச்சி நடந்தது. இதில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இதையொட்டி, அப்பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.போக்குவரத்து நெரிசலில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காரும் சிக்கியது. இதனால் அவர், 25 நிமிடம் தாமதமாக, நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.போக்குவரத்து நிறுத்தப்பட்டது பற்றி காணொலி வாயிலாக, உள்துறை செயலர் பிரபாகரனிடம் விளக்கம் கேட்ட நீதிபதி, 'என் காரை நிறுத்தியது போல, முதல்வர், அமைச்சர்களின் வாகனங்களை போலீசாரால் நிறுத்த முடியுமா' என்று கேள்வி எழுப்பினார்.
இச்சம்பவத்திற்கு பின், தன் பயணத்தின் போது பின்னால் வரும் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, டி.ஜி.பி., சைலேந்திர பாபு உள்ளிட்ட அதிகாரிகளுடன், கான்வாய் வாகனங்கள் குறைப்பு தொடர்பாக, தலைமைச் செயலர் இறையன்பு விவாதித்தார்.
அதிகாரிகள்அதையடுத்து, முதல்வர் பயணத்தின் போது, 12 கான்வாய் வாகனங்கள் செல்வதை, ஆறாக குறைப்பது என்று முடிவு செய்துள்ளனர்.மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு செல்வதற்கு ஏற்ப, போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X