கால்நடைகளுக்கு தடுப்பூசி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடைகளுக்கு தடுப்பூசி

Added : அக் 09, 2021
Share
கோவை:''கால்நடைகளுக்கு நோய் தொற்று வராமல் கவனமாக பராமரிக்க வேண்டும்,'' என, கோவை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பெருமாள்சாமிஆலோசனை வழங்கி உள்ளார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:மழைக்காலம் துவங்கும் முன், மார்ச் அல்லது செப்டம்பரில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவது வழக்கம். கொரோனாவால் தள்ளிப்போய் விட்டது. இம்மாதம் தடுப்பூசி போடும் பணி துவங்கிவிடும்.

கோவை:''கால்நடைகளுக்கு நோய் தொற்று வராமல் கவனமாக பராமரிக்க வேண்டும்,'' என, கோவை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பெருமாள்சாமிஆலோசனை வழங்கி உள்ளார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:மழைக்காலம் துவங்கும் முன், மார்ச் அல்லது செப்டம்பரில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவது வழக்கம். கொரோனாவால் தள்ளிப்போய் விட்டது. இம்மாதம் தடுப்பூசி போடும் பணி துவங்கிவிடும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கொரோனா தொற்றால் கால்நடைகளுக்கு பாதிப்பு இல்லை.கால்நடைகள் வளர்ப்பவர்கள் மழைக்காலத்தில் நோய் தொற்று வராமல்கவனமாக பராமரிக்க வேண்டும். மழை நீர் தேங்கியுள்ள புல் தரையில் மாடுகளை மேய விட வேண்டாம். மழை பெய்யும்போது,மரத்தடியில் கட்டிப்போடக்கூடாது.இடி மின்னல் தாக்க வாய்ப்புள்ளது. கட்டுத்தரையில் மாட்டின் சிறுநீர் தேங்காமல் இருக்க வேண்டும். மாடு கட்டி இருக்கும் பகுதியில்,மின்கசிவு இருக்கிறதா என்பதை கவனிப்பது அவசியம்.இந்த சீசனை பொறுத்தவரை, நார்ச்சத்து அதிகமுள்ள தீவனங்களை பால் மாடுகளுக்கு கொடுக்க வேண்டும். பசுந்தீவனத்தின் அளவை குறைத்துக்கொள்ளலாம். மாட்டுக்கு குடிக்க வைக்கும் தண்ணீர் அதிகம் குளிர்ச்சியாக இல்லாமல் இருப்பது நல்லது.இவ்வாறு, அவர்கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X