பொது செய்தி

தமிழ்நாடு

அடுத்தடுத்து திருட்டு; போலீசாருக்கு 'மெமோ': ரோந்து பணியை தீவிரப்படுத்த உத்தரவு

Added : அக் 09, 2021
Share
Advertisement
கோவை;கோவையில், அடுத்தடுத்து இரு இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடந்ததால், சம்பந்தப்பட்ட ஸ்டேஷன்களில் பணிபுரியும் போலீசாருக்கு விளக்கம் கேட்டு, 'மெமோ' கொடுக்கப்பட்டு உள்ளது.கோவை நகர்ப்பகுதியில், மக்கள் தொகை, 20 லட்சத்தை கடந்துள்ளது. நகரை ஒட்டிய பகுதிகள் விரிவடைந்து வருவதால், குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய போலீசார், கண்காணிப்பு

கோவை;கோவையில், அடுத்தடுத்து இரு இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடந்ததால், சம்பந்தப்பட்ட ஸ்டேஷன்களில் பணிபுரியும் போலீசாருக்கு விளக்கம் கேட்டு, 'மெமோ' கொடுக்கப்பட்டு உள்ளது.கோவை நகர்ப்பகுதியில், மக்கள் தொகை, 20 லட்சத்தை கடந்துள்ளது. நகரை ஒட்டிய பகுதிகள் விரிவடைந்து வருவதால், குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய போலீசார், கண்காணிப்பு பணியில் தொய்வாக செயல்படுவதால், சமீபகாலமாக, மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் வழிப்பறி, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் அரங்கேற ஆரம்பித்திருக்கின்றன.சில மாதங்களுக்கு முன், கோவை டாடாபாத் பகுதியில், நெய் வியாபாரி வீட்டில், 100 பவுன் நகை திருடு போனது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. சில தினங்களுக்கு முன், இரும்பு வியாபாரி வீட்டில், 101 பவுன் நகை, பீளமேடு பகுதியில் இன்ஜி., வீட்டில், 63 பவுன் நகை என, சம்பவங்கள் தொடர்கின்றன. குறிப்பாக, பூட்டியிருக்கும் வீடுகளை குறி வைத்து திருட்டு சம்பவங்கள் நடத்தப்படுகின்றன. துப்பு கிடைக்காததால், குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.குற்றங்கள் நடக்காமல் தடுக்க போலீசார் இரவு நேர ரோந்து பணியை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளனர். பகலில் ரோந்து செல்லும் போலீசார், பூட்டியிருக்கும் வீடுகள் குறித்த தகவல்களை சேகரிக்கவும், உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தகவல் தெரிவிக்காத போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாநகர போலீசார் கூறுகையில், 'பூட்டியிருக்கும் வீடுகள் குறித்த தகவல் சேகரிக்கவும், அவற்றை உடனடியாக தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிழக்கு பகுதியில் உள்ள மூன்று போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது நடந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்க,, நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவங்கள் நடந்த பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிந்த போலீசாருக்கு விளக்கம்கேட்டு 'மெமோ' வழங்கப்பட்டுள்ளது. திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க, தொடர் கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X