பொது செய்தி

தமிழ்நாடு

இனி, மக்கள் குறை தீரும் :புதன்கிழமை சிறப்பு முகாம்

Added : அக் 09, 2021
Share
Advertisement
கோவை:'இனி, வாரந்தோறும் புதன்கிழமை மண்டலம் வாரியாக மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படும்' என, கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.கோவை மாநகராட்சி பகுதிகளில் சொத்து வரி, காலியிட வரி, சொத்து வரி பெயர் மாற்றம், தொழில் வரி, தொழில் உரிமம் வழங்குதல், புதுப்பித்தல், குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, தங்கள் பகுதியில் மின் விளக்கு, குடிநீர், சுகாதார பிரச்னைகளுக்கும்,

கோவை:'இனி, வாரந்தோறும் புதன்கிழமை மண்டலம் வாரியாக மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படும்' என, கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.கோவை மாநகராட்சி பகுதிகளில் சொத்து வரி, காலியிட வரி, சொத்து வரி பெயர் மாற்றம், தொழில் வரி, தொழில் உரிமம் வழங்குதல், புதுப்பித்தல், குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, தங்கள் பகுதியில் மின் விளக்கு, குடிநீர், சுகாதார பிரச்னைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் தீர்வு காண, மாதம்தோறும் அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர் முகாம் நடந்து வந்தது. கொரோனா காரணமாக அம்முகாம் தற்காலிமாக நிறுத்தப்பட்டது.தொற்று பரவல் குறைந்து வருவதால், மீண்டும் மக்கள் குறைதீர் முகாம் நடத்த, தமிழக அரசு அறிவுறுத்தியது. அதன்படி, வாரந்தோறும் புதன்கிழமை மக்களிடம் குறைகேட்கப்படும். முதல் வாரம் - கிழக்கு மண்டலம், இரண்டாவது வாரம் - மேற்கு, மூன்றாவது வாரம் - வடக்கு, நான்காவது வாரம் - தெற்கு, அதே நான்காவது வாரத்தில் வெள்ளிக்கிழமையன்று, மத்திய மண்டலத்தில் முகாம் நடைபெறும்.இதன்படி, வரும், 13ம் தேதி காலை, 10:30 முதல், 12:00 மணி வரை மேற்கு மண்டலத்தில், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் தலைமையில், மக்கள் குறைதீர்முகாம் நடக்கும்.தங்கள் கோரிக்கை மனுக்களை நேரில் அளிக்கலாம் என, மாநகராட்சி அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X