பொது செய்தி

தமிழ்நாடு

விஷ் யூ ஹேப்பி பர்த் டே...!

Added : அக் 09, 2021
Share
Advertisement
நடைபயிற்சிக்கு பெயர்போன ரேஸ்கோர்ஸ், இப்போது, பிறந்தநாள் விழா கொண்டாடும் வீதியாகி விட்டது.மாலை வேளையில் கார், பைக் சகிதமாக இங்கு கூடும் இளைஞர்கள், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் உருவாக்கப்பட்ட ஐஸ் லைட், எலக்ட்ரிக் சர்க்கிள், ஐ லவ் ரேஸ்கோர்ஸ், ஜோன் 1,2,3,4 ஆகிய பகுதிகளை ஆக்கிரமிக்கின்றனர்.அதிக அளவு ஒளி உமிழும் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதால், போட்டோ பிரேமிற்கு
 விஷ் யூ ஹேப்பி பர்த் டே...!

நடைபயிற்சிக்கு பெயர்போன ரேஸ்கோர்ஸ், இப்போது, பிறந்தநாள் விழா கொண்டாடும் வீதியாகி விட்டது.மாலை வேளையில் கார், பைக் சகிதமாக இங்கு கூடும் இளைஞர்கள், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் உருவாக்கப்பட்ட ஐஸ் லைட், எலக்ட்ரிக் சர்க்கிள், ஐ லவ் ரேஸ்கோர்ஸ், ஜோன் 1,2,3,4 ஆகிய பகுதிகளை ஆக்கிரமிக்கின்றனர்.அதிக அளவு ஒளி உமிழும் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதால், போட்டோ பிரேமிற்கு அழகாகவும் ரம்மியமாகவும் காட்சியளிக்கிறது. இவ்விடங்களை பிறந்த நாள் விழா கொண்டாடும் பகுதியாக மாற்றி விடுகின்றனர். நண்பர்களோடு ஐக்கியமாகும் இளைஞர்கள், திறந்தவெளியில் பிறந்த நாள் பாடல் ஒலிக்கச் செய்து கேக் வெட்டி, ஆரவாரம் செய்கின்றனர்.இக்கலாச்சாரத்தை பெரும்பாலானோர் பின்பற்றத் துவங்கி விட்டனர். ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் உள்ள நான்கு ஜோன்களும், ஐஸ் லைட் ஏரியாவும் ஒவ்வொரு நாளும் இளைஞர் பட்டாளங்களால் ஹவுஸ் புல்லாகி விடுகிறது.எலக்ட்ரிக்கல் சர்க்கிள் மற்றும் ஐ லவ் ரேஸ்கோர்ஸ் ஆகியவை போட்டோ ஷூட் செய்யுமிடமாகி விட்டது. வார நாட்களில் இப்படி என்றால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில் மக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளவே முடியாதபடி, இளைஞர்கள் கூட்டம் முண்டியடிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X