ஐ ஆம் ஸ்பெஷல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஐ ஆம் ஸ்பெஷல்'

Added : அக் 09, 2021
Share
ஸ்வர்கா பவுண்டேஷன் ஏழாம் ஆண்டு துவக்க விழா, கோவை ரெசிடென்சி ஓட்டலில் நடந்தது.'மல்டிபில் செலீரோஸ்' மற்றும் நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களது வாழ்க்கை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது, ஸ்வர்கா பவுண்டேஷன். தேசிய அளவில் கலை, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் சாதித்த மாற்றுத்திறனாளிகளை கவுரவிக்கும் வகையில், 'ஐ ஆம் ஸ்பெஷல்' (நான்
 'ஐ ஆம் ஸ்பெஷல்'

ஸ்வர்கா பவுண்டேஷன் ஏழாம் ஆண்டு துவக்க விழா, கோவை ரெசிடென்சி ஓட்டலில் நடந்தது.'மல்டிபில் செலீரோஸ்' மற்றும் நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களது வாழ்க்கை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது, ஸ்வர்கா பவுண்டேஷன். தேசிய அளவில் கலை, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் சாதித்த மாற்றுத்திறனாளிகளை கவுரவிக்கும் வகையில், 'ஐ ஆம் ஸ்பெஷல்' (நான் சிறந்தவர்) என்ற தலைப்பில், 2022ம் ஆண்டுக்கான காலண்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்திலும், சாதனை மாற்றுத்திறனாளி படம் அச்சிடப்பட்டு உள்ளது. காலண்டரை, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் வெளியிட்டார்.''மாற்றுத்திறனாளி என ஒதுங்கி நிற்காமல், சமூகத்தில் வெற்றி பெற்றதை பார்ப்பதன் மூலம், மற்ற மாற்றுத்திறனாளிகளும் பொதுமக்களும் ஊக்கம் பெற வேண்டும் என்பதே, இக்காலண்டரின் அடிப்படை நோக்கம்,'' என்கிறார் ஸ்வர்கா பவுண்டேஷன் நிறுவனர் சொர்ணலதா.நிகழ்ச்சியில், பார்க் கல்வி குழும தலைமை நிர்வாக அதிகாரி அனுஷா ரவி, ஸ்வர்கா பவுண்டேஷன் அறங்காவலர் குருபிரசாத், மனநல மருத்துவர் மஞ்சுஸ்ரீ மற்றும் ஸ்வர்கா பவுண்டேஷன் உறுப்பினர் தினேஷ் குமார் பந்தியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X