பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறைவு 2ம் கட்ட ஓட்டுப்பதிவு 'விறுவிறு'

Added : அக் 09, 2021
Share
Advertisement
சென்னை:ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு, நேற்று மாலை நிறைவடைந்தது; 73.27 சதவீத ஓட்டுகள் பதிவாகின. ஓட்டு எண்ணிக்கை நாளை மறுதினம் நடக்க உள்ளது.தேர்தல் நடத்தப்படாமல் இருந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல், இரண்டு கட்டங்களாக

சென்னை:ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு, நேற்று மாலை நிறைவடைந்தது; 73.27 சதவீத ஓட்டுகள் பதிவாகின. ஓட்டு எண்ணிக்கை நாளை மறுதினம் நடக்க உள்ளது.

தேர்தல் நடத்தப்படாமல் இருந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல், இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.


பாதுகாப்பு



அதன்படி, 6ம் தேதி, ஒன்பது மாவட்டங்களில் உள்ள 79 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்; 755 ஒன்றிய குழு உறுப்பினர்; 1,577 ஊராட்சி தலைவர்; 12 ஆயிரத்து 252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, முதல் கட்டமாக தேர்தல் நடந்தது.இரண்டாம் கட்டமாக நேற்று, ஒன்பது மாவட்டங்களில் உள்ள 62 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்; 626 ஒன்றிய குழு உறுப்பினர்; 1,324 ஊராட்சி தலைவர்; 10 ஆயிரத்து 329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

அதேபோல, மற்ற மாவட்டங்களில் காலியாக இருந்த, ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.ஓட்டுப்பதிவின் போது அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.நேற்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்தது.மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் ஓட்டளித்தனர். காலை 9:00 மணிக்கு ஒன்பது மாவட்டங்களில் 9.72; காலை 11:00 மணிக்கு 25.90; மதியம் ௧:௦௦ மணிக்கு 46.86; பிற்பகல் 3:00 மணிக்கு 60.34 சதவீத ஓட்டுகள் பதிவாகின. மாலை 6:00 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது.

ஒரு சில இடங்களில் வாக்குவாதங்கள், சிறு கைகலப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. பெரும்பாலான இடங்களில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டுப்பெட்டிகள் 'சீல்' வைக்கப்பட்டு, ஓட்டு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டன.ஓட்டு எண்ணிக்கைநேற்று நடந்த தேர்தலில், காஞ்சிபுரம் 72; செங்கல்பட்டு 70; விழுப்புரம் 83.6; கள்ளக்குறிச்சி 82; வேலுார் 68; ராணிப்பேட்டை 75.3; திருப்பத்துார் 73.5; திருநெல்வேலி 65; தென்காசியில், 70 சதவீத ஓட்டுகள் பதிவானதாக, மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இறுதி நிலவரம் வரும் போது, இந்த சதவீதங்களில் மாற்றம் இருக்கும். ஓட்டு எண்ணிக்கை நாளை மறுதினம் காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X