பொது செய்தி

தமிழ்நாடு

குண்டலகேசி சொல்வதென்ன?

Added : அக் 09, 2021
Share
Advertisement
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று குண்டலகேசி; மிகவும் சுவாரஸ்யமான கதை.பூம்புகார் நகரத்தில் வாழ்ந்த பெரும் செல்வந்தரின் மகள் பத்திரை. சுருள் சுருளான அழகிய கூந்தலை கொண்ட பேரழகி. திருடனின் அழகில் மயங்கி, காதல் கொள்கிறாள். அவனையே திருமணம் செய்துகொள்ள, தந்தையிடம் வேண்டி விரும்பி, திருமணம் செய்து கொள்கிறாள். அதன்பின், அவளது வாழ்க்கை திசை மாறுகிறது.திருடனாக இருந்த கணவன்

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று குண்டலகேசி; மிகவும் சுவாரஸ்யமான கதை.பூம்புகார் நகரத்தில் வாழ்ந்த பெரும் செல்வந்தரின் மகள் பத்திரை. சுருள் சுருளான அழகிய கூந்தலை கொண்ட பேரழகி. திருடனின் அழகில் மயங்கி, காதல் கொள்கிறாள். அவனையே திருமணம் செய்துகொள்ள, தந்தையிடம் வேண்டி விரும்பி, திருமணம் செய்து கொள்கிறாள். அதன்பின், அவளது வாழ்க்கை திசை மாறுகிறது.திருடனாக இருந்த கணவன் திருந்தவில்லை. மனைவியை கொன்று, செல்வங்களை கொள்ளையிட திட்டமிடுகிறான். அவளோ, கணவனின் சூழ்ச்சியை அறிந்து, தந்திரமாக அவனை கொன்று விட்டு, துறவியாக மாறுகிறாள். இந்த பழம்பெரும் காப்பிய கதையில், இன்றைய சமூக இளைஞர்களுக்கு சொல்ல வேண்டிய முக்கிய கருத்து இருக்கிறது, என்கிறார், கவிஞர் நான்சி கோமகன்.செய்யுள் வடிவத்தில் உள்ள குண்டலகேசி காப்பியத்தை, எளிமையான தமிழில், மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கதையாக எழுதி இருக்கிறார். இவர் எழுதிய குண்டலகேசி நுால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. கோவை பின்.என்.புதுாரில் வசிக்கும் இவர், தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிகிறார்.நான்சி கோமகன் கூறுகையில், ''கண்டதும் காதல் கொள்ளும் மோகம் அந்தக்காலம் முதல் இந்த காலம் வரை தொடர்கிறது. குண்டலகேசி காப்பியத்தின் கருத்தை இன்றைய இளைஞர்கள், இளம்பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும். காப்பிய காலத்தில் இருந்து காதல் குற்றம் தொடர்கிறது; அதை தடுக்க இக்கதை உதவும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X