பொது செய்தி

தமிழ்நாடு

வந்தாச்சு தீபாவளி; டிரெண்டிங் சேலை எது?

Added : அக் 09, 2021
Share
Advertisement
நமது கலாசாரத்தில் பிரிக்க முடியாதது சேலை. ஆன்-லைன் தளங்களில் தேடி, தேடி பேஷன் ஆடைகளை வாங்கும் மார்டன் பெண்களும், பண்டிகைக்கு சேலைகளையே அணிய விரும்புகின்றனர்.நவீன யுகத்துக்கேற்ப சேலைகளிலும் புது, புது டிசைன்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த தீபாவளிக்கு உங்கள் தேர்வு சேலை என்றால், சேலைகளின் லேட்டஸ்ட் டிசைன்களை அணிந்து தனித்துவமாக மின்னுங்கள்.மெட்டாலிக் சேலைமெட்டல்
 வந்தாச்சு தீபாவளி; டிரெண்டிங் சேலை எது?

நமது கலாசாரத்தில் பிரிக்க முடியாதது சேலை. ஆன்-லைன் தளங்களில் தேடி, தேடி பேஷன் ஆடைகளை வாங்கும் மார்டன் பெண்களும், பண்டிகைக்கு சேலைகளையே அணிய விரும்புகின்றனர்.நவீன யுகத்துக்கேற்ப சேலைகளிலும் புது, புது டிசைன்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த தீபாவளிக்கு உங்கள் தேர்வு சேலை என்றால், சேலைகளின் லேட்டஸ்ட் டிசைன்களை அணிந்து தனித்துவமாக மின்னுங்கள்.மெட்டாலிக் சேலைமெட்டல் ஷைன் மற்றும் வண்ணங்கள் கொண்ட மெட்டாலிக் சேலை, 2021ன் சிறந்த சேலை டிரெண்டுகளில் ஒன்று. பாரம்பரியம் மற்றும் நவீனம் கலந்த லுக்கை மெட்டாலிக் சேலை கொடுக்கும். இந்த சேலைகளின் மெட்டீரியல் பளபளவென இருக்கும். வெண்கலம், வெள்ளி, தங்கம் போன்ற வண்ணங்களில் கிடைக்கிறது. மிகவும் போல்டான லுக்கை கொடுப்பவை. ஜொலிக்கும் தீபாவளி கொண்டாட்டத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.பேஸ்டல் சில்க் சேலைஅனைத்து இந்திய ஸ்கின் டோன்களுக்கும், உடல் வடிவங்களுக்கும், துாய மற்றும் ஷிபான் கலந்த பட்டுப்புடவை சிறந்ததாக இருக்கிறது. இவற்றில் புதுமையாக இப்போது பேஸ்டல் எனப்படும் வெளிர் வண்ணங்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. சிவப்பு, பச்சை என்ற அடர் வண்ண பட்டுப்புடவை போக்குகள் மாறி, இப்போது வெளிர் வண்ண சேலைகளுக்கு மணப்பெண்களும் மாறியிருக்கின்றனர். அமைதியான மற்றும் இனிமையான உணர்வை இவ்வகை சேலைகள் அளிக்கின்றன.ஒன் மினிட் சேலைசேலை கட்டணும்னு ஆசையா இருக்கு. மடிப்பும், பள்ளுவும் வரவே மாட்டேங்குதே என ஏங்கும் பெண்களா. இதோ, உங்களுக்காகவே இருக்கிறது ஒன் மினிட் சேலை. சேலையின் முந்தாணையில் அழகிய அடுக்குகளும், அந்த முந்தானையில் இருந்து இடுப்பு பகுதியில் இருந்து சீரான மடிப்புகளும் ரெடிமேடாக இருக்கும். ஒன்றிரண்டு நிமிடங்களில், சிரமமின்றி சேலையை அணிந்து விடலாம். சேலையை அடிக்கடி சரிசெய்ய வேண்டிய கவலையும் இருக்காது.புளோரல் எம்ப்ராய்டரிஇறைவனின் இனிய படைப்பான பூக்களை விரும்பாத பெண்களே இல்லை. பூக்களை நேசிக்கும் பெண்களை மையப்படுத்தி, புளோரல் எம்ப்ராய்டரி சேலை, தற்போது டிரெண்டாகி வருகிறது. வெளிர் நிற பேக்ரவுண்டுகளில், அடர்நிறங்களில் மலர் எம்ப்ராய்டரிகள் சேலைகளில் இடம்பெறுகின்றன. ஜியார்ஜட், சாடின் மெட்டீரியல் சேலைகள், புளோரல் எம்ப்ராய்டரிகளுக்கு ஏற்றவை. புளோரல் எம்ப்ராய்டரி சேலையை அணிய விரும்பாவிட்டாலும், பிளைன் சேலைகளுக்கு, புளோரல் எம்ப்ராய்டரி பிளவுஸ்களை அணியலாம்.ரவுல் சேலை90களில் பிரபலமான ரவுல் சேலை, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இப்போது டிரெண்டாகி வருகிறது. இதில், சேலை பார்டரில் ரவுல்கள் அல்லது பிரில்கள் இருக்கும். எந்தவொரு மெனக்கெடலுமின்றி, உங்களுக்கு ஸ்டைலிஷ் லுக் தர, ரவுல் சேலைகள் பெஸ்ட் சாய்ஸ். இந்த ரக சேலைகள், டிரெடிஷனல், டிரெண்டிங் என, இரு பேட்டர்ன்களில் மனதை அள்ளுகிறது. சிவப்பு, கருப்பு, நீலம் மற்றும் பச்சை ஆகிய நிறங்களில், சாலிட் ஷேடுகளில் கிடைக்கும், ரவுல் சேலை உங்கள் அழகை மேலும் மெருகூட்டும்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X