பையூர் கண்மாய் கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பையூர் கண்மாய் கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்

Added : அக் 09, 2021
Share
சிவகங்கை-சிவகங்கை அருகே பையூர் கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கலெக்டர் உத்தரவுப்படி இயந்திரம் மூலம் கால்வாய் துார்வாரும் பணி நடைபெற்று வருகிறது.சிவகங்கை ஒன்றியம் பையூர் கிராம கண்மாய் 85 ஏக்கரில் உள்ளது. இக்கண்மாய் மூலம் பையூர், காட்டுக்குடியிருப்பு கிராமங்களை சேர்ந்த 95 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

சிவகங்கை-சிவகங்கை அருகே பையூர் கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கலெக்டர் உத்தரவுப்படி இயந்திரம் மூலம் கால்வாய் துார்வாரும் பணி நடைபெற்று வருகிறது.சிவகங்கை ஒன்றியம் பையூர் கிராம கண்மாய் 85 ஏக்கரில் உள்ளது. இக்கண்மாய் மூலம் பையூர், காட்டுக்குடியிருப்பு கிராமங்களை சேர்ந்த 95 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கண்மாய்க்கு 48 காலனியில் சேகரமாகும் மழை நீர் ஆயுதப்படை குடியிருப்பு, ரோஸ்நகர், முல்லை நகர், கிருஷ்ணா நகர் வழியே 2 கி.மீ., துார கால்வாய்களில் வந்து கண்மாயை நிரப்பும். முதலில் கால்வாய் 42 அடி அகலத்தில் இருந்தது. வீடுகள் ஆக்கிரமிப்பால் 15 அடியாக சுருங்கியது. கால்வாயில் கட்டட கழிவுகளை போட்டு அடைத்ததால், மழை நீர் கால்வாயில் செல்ல முடியாமல் ரோஸ்நகர், முல்லைநகர் குடியிருப்பிற்குள் புகுந்தது.விவசாயிகள் புகார்கால்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் துார்வாராததால் மழை நீர் பையூர் கண்மாய்க்கு செல்லாமல் விரயமானதாக அப்பகுதி விவசாயிகள் கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் புகார் அளித்தனர். அவர் கால்வாயை துார்வார விவசாயிகளுக்கு 2 இயந்திரம் ஒதுக்கீடு செய்தார். பையூர் கிராமத்தினர் முழு முயற்சியால் கால்வாய் துார்வாரும் பணி நடந்து வருகிறது.ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றம் எம்.கருப்பையா, விவசாயி, பையூர்: பையூர் கண்மாய் பாசனம் மூலம் 3 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கரும்பு, நெல், நிலக்கடலை பயிரிட்டு வந்தனர். கால்வாய் ஆக்கிரமிப்பால் மழை நீர் கண்மாய்க்கு வரவில்லை. கலெக்டரிடம் கோரிக்கை வைத்ததால், அவர் இயந்திரம் வழங்கி கால்வாய் துார்வாரப்பட்டு வருகிறது. வருவாய்துறையினர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டடங்களையும் பாரபட்சமின்றி அகற்ற வேண்டும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X