போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு: ஆஷிஷ் மிஸ்ரா கைது

Updated : அக் 10, 2021 | Added : அக் 09, 2021
Share
Advertisement
லக்கிம்பூர் :உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடந்த வன்முறை தொடர்பான விவகாரத்தில் ஆஷிஷ் மிஸ்ரா, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.உ.பி.,யில் லக்கிம்பூரில் சமீபத்தில் பா.ஜ., கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மத்திய உள்துறை
 விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு: ஆஷிஷ் மிஸ்ரா கைது

லக்கிம்பூர் :உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடந்த வன்முறை தொடர்பான விவகாரத்தில் ஆஷிஷ் மிஸ்ரா, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.

உ.பி.,யில் லக்கிம்பூரில் சமீபத்தில் பா.ஜ., கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மத்திய உள்துறை இணைஅமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, கார், கூட்டத்துக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது.


latest tamil news



இதையடுத்து, அங்கு நடந்த வன்முறையில் நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப் பட்டனர். எட்டு பேர் இறந்தது தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா உட்பட சிலர் மீது, போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பினர்.

இன்று கோர்ட்டில் ஆஜர்
இந்நிலையில், லக்கிம்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று (அக்.09) காலை வந்த ஆஷிஷ் மிஸ்ரா, போலீசார் முன் ஆஜரானார். அவரிடம், குற்றப்பிரிவு துணை ஜ.ஜி., உபேந்திர அகர்வால் தலைமையில் போலீசார் 12 மணி நேரம் நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க மறுத்ததால், கைது செய்யப்பட்டதாகவும், இ்ன்று காலை (அக்.10) கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் போலீஸ் வட்டார தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X