மனநலமே, ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்! - இன்று உலக மனநல நாள் -| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மனநலமே, ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்! - இன்று உலக மனநல நாள் -

Added : அக் 09, 2021
Share
ஆண்டுதோறும் அக்.,10, உலக மனநல நாளாக, உலக சுகாதார அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது. கோவிட்-19 பெருந்தொற்று பேரழிவு, தேச எல்லைகளை கடந்தும் மனித உயிர்களுக்கு மாபெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழப்புகள் ஒருபுறம் இருக்க மக்கள் எதிர்கொண்ட உடல்நல மன நல துயரங்கள் ஏராளம். தொற்று காலத்தில் மக்கள், ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியாத நிலை, சமூக தொடர்பு இல்லாத நிலை இருந்தது

ஆண்டுதோறும் அக்.,10, உலக மனநல நாளாக, உலக சுகாதார அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது. கோவிட்-19 பெருந்தொற்று பேரழிவு, தேச எல்லைகளை கடந்தும் மனித உயிர்களுக்கு மாபெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழப்புகள் ஒருபுறம் இருக்க மக்கள் எதிர்கொண்ட உடல்நல மன நல துயரங்கள் ஏராளம். தொற்று காலத்தில் மக்கள், ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியாத நிலை, சமூக தொடர்பு இல்லாத நிலை இருந்தது மட்டும் அல்லாமல், உயிர் இழப்புகளையும் சந்திக்க நேர்ந்தது.தொழிலில் செழித்து நின்றிருந்த கொங்கு மண்டலம் கொரோனா தாக்கத்தால் நிலை குலைந்துபோனது. சிறு தொழில் முனைவோர் முதல் பெருந்தொழில் அதிபர்கள் வரை கடுமையான பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகினர். தொழிலாளர்களும் வேலையிழப்புக்கு ஆளாகினர். பொருளாதார பாதிப்புகள் உடல்நல பாதிப்பாகவும் அதுவே பின்னர் மனநல பாதிப்பாகவும் உருவெடுத்தது. இந்நெருக்கடியில் இருந்து எப்படி மீள்வோம் என்ற பதட்டம், பயம், மிகை அச்சம், மனசோர்வு, குற்ற உணர்வு எதிர்மறை எண்ணங்கள் திரும்ப திரும்ப உருவாக்குதல் போன்றவை, தூக்கமின்மையில் துவங்கி சில வேளைகளில் தற்கொலைப் பெருந்துயரில் கொண்டு போய் நிறுத்தும் அளவிற்கு அதிகரித்தது.எந்த ஒரு நெருக்கடியான சூழலிலும் நிதானமான மனநிலையுடன் யோசித்து செயல்பட வேண்டியது அவசியம். நெருக்கடிகள் வரும் போகும் அதை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டுமே தவிர பயத்தோடு தவறான முடிவுகளை எடுப்பது போன்றவை சரியான தீர்வு ஆகாதுமனநல பிரச்னைகள் இருப்பவர்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் அருகிலுள்ள தகுதியான அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மனநல ஆலோசகர், மனநல மருத்துவர்களை அணுகி உரிய மருத்துவ ஆலோசனையை பெறவேண்டும். தற்போதைய சூழ்நிலையில் முதல் நிலை நகரங்கள், மற்றும் இரண்டாம் நிலை நகரங்கள், மற்றும் கிராமப்புறங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் மனநல மருத்துவர்கள் பணியாற்றுகிறார்கள்.கிராம புறங்களில் வசிக்கும் மக்கள், மனநலம் சார்ந்த பிரச்சனைக்கு தீர்வு காண மூட நம்பிக்கைகளை வளர்க்கும் விதமான செயல்களில் ஈடுபடும் தவறான நபர்களை அணுகாமல் மனநல மருத்துவர்களை நாடுவதே நல்லது, சிறந்தது.தற்போதைய நவீன உலகில் கிராமங்கள் வரையிலும் இணைய தள வசதிகள் வந்துவிட்டன. தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் இருக்கும் மனநல மருத்துவர்களின் மையங்களை இணைய தளத்தில் தேடி எளிதாக கண்டறியலாம். அதற்கு கிராமங்களில் வசிக்கும் படித்த இளைஞர்கள் மக்களுக்கு உதவ முன் வர வேண்டும். அடுத்த தலைமுறை ஆரோக்கியமான தலைமுறையாக மாறிட படித்த இளைஞர்கள் பங்களிப்பு மிக மிக அவசியம்.கோவிட் பெரும் தொற்று தவிர்க்க தடுப்பூசி போட்டு கொள்வது மட்டுமே ஒரே வழி. முக கவசம் அணிவதை கடைபிடித்தால் உயிர் இழப்புகளை தடுக்கலாம்.- என்.எஸ்., மோனி, மனநல மருத்துவர்.drnsmony@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X