பொது செய்தி

தமிழ்நாடு

பருவமழை முன்னெச்சரிக்கை; தாலுகா தோறும் கமிட்டி: 'நோடல்' ஆபீசராக, துணை கலெக்டர்கள்

Added : அக் 10, 2021
Share
Advertisement
திருப்பூர்;வடகிழக்கு பருவமழை வெள்ள பாதிப்புகளை தடுக்கவும், மீட்பு பணியை மேற்கொள்ளவும், தாலுகா தோறும், 50 பேர் அடங்கிய கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.வடகிழக்கு பருவமழை துவங்கிவிட்டதால், அதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் துவக்கியுள்ளது. மழை வெள்ளத்தால் ஏற்படும் சேதத்தை தடுக்கவும், மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் வசதியாக, சிறப்பு குழுக்கள்
 பருவமழை முன்னெச்சரிக்கை; தாலுகா தோறும் கமிட்டி: 'நோடல்' ஆபீசராக, துணை கலெக்டர்கள்

திருப்பூர்;வடகிழக்கு பருவமழை வெள்ள பாதிப்புகளை தடுக்கவும், மீட்பு பணியை மேற்கொள்ளவும், தாலுகா தோறும், 50 பேர் அடங்கிய கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.வடகிழக்கு பருவமழை துவங்கிவிட்டதால், அதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் துவக்கியுள்ளது. மழை வெள்ளத்தால் ஏற்படும் சேதத்தை தடுக்கவும், மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் வசதியாக, சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.தாலுகா தோறும், ஆர்.டி.ஓ., உள்ளிட்ட துணை கலெக்டர்கள் தலைமையில், 40 முதல், 50 பேர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.முன்னெச்சரிக்கை கமிட்டிவெள்ள சேதம் ஏற்படும் பகுதிகளில், எச்சரிக்கை முன்னறிவிப்பு செய்யவும், முன்னேற்பாடுகளை செய்யவும் வசதியாக, தாசில்தார், மாநகராட்சி அதிகாரிகள், போலீசார், நில வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் என, 15 பேர் அடங்கிய முன்னெச்சரிக்கை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.நிவாரண முகாம்கள்ஒவ்வொரு தாலுகாவிலும், போலீசார் அதிகாரிகள் அடங்கிய, ஆய்வுக்குழுவும், தீயணைப்புத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் அடங்கிய மீட்பு குழுக்கள்; மாநகராட்சி அதிகாரிகள், பி.டி.ஓ.,க்கள், சுகாதாரத்துறை, கால்நடை மருத்துவமனை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த, 20 பேர் அடங்கிய குழுவினர் மூலம், நிவாரண முகாம் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.திருப்பூர் வடக்கு தாலுகா கண்காணிப்பு அதிகாரியாக, ஆர்.டி.ஓ., ஜெகநாதன்; திருப்பூர் தெற்கு -நுகர்பொருள் வாணிபக கழக மண்டல மேலாளர் குணசேகர்; அவிநாசி - பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வாசுகி; பல்லடம் - மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன்;ஊத்துக்குளி - தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு) சிவகுமாரி; தாராபுரம் - தாராபுரம் சப் கலெக்டர் ஆனந்த் மோகன்; காங்கயம் தாலுகா - கலால் உதவி கமிஷனர் சுகுமார்; உடுமலை - உடுமலை ஆர்.டி.ஓ., கீதா; மடத்துக்குளம் - ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.தன்னார்வலர்கள் உதவிக்குழு

தாலுகா மற்றும் வார்டு அல்லது பகுதி வாரியாக, தலா, 15 தன்னார்வலர்கள் அடங்கிய, முதல் உதவிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், தேவையான மருந்து பொருட்களுடன், தயார் நிலையில் இருப்பார்கள். வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிக்கு விரைந்து, மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய, வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X