பொது செய்தி

தமிழ்நாடு

மூணாறில் குப்பை சேகரிப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகள்

Added : அக் 10, 2021
Share
Advertisement
மூணாறு--மூணாறில் குப்பைகள் சேகரிப்பதில் ஊராட்சி விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் நவ. ஒன்று முதல் அமலுக்கு வருகிறது.மூணாறில் குப்பைகளை கையாளுவது குறித்துஆலோசனை கூட்டம் ஊராட்சி தலைவர் மணிமொழி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மார்ஸ்பீட்டர், செயலர் அஜித்குமார், ஓட்டல், ரெஸ்டாரண்ட் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.வர்த்தக நிறுவனங்கள்

மூணாறு--மூணாறில் குப்பைகள் சேகரிப்பதில் ஊராட்சி விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் நவ. ஒன்று முதல் அமலுக்கு வருகிறது.மூணாறில் குப்பைகளை கையாளுவது குறித்துஆலோசனை கூட்டம் ஊராட்சி தலைவர் மணிமொழி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மார்ஸ்பீட்டர், செயலர் அஜித்குமார், ஓட்டல், ரெஸ்டாரண்ட் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.வர்த்தக நிறுவனங்கள் குப்பையைதரம் பிரித்து வழங்க வேண்டும். குப்பை சேகரிப்பதற்கு மாதம்தோறும் ரிசார்ட் ரூ.3 ஆயிரம், ஹோம் ஸ்டே ரூ.ஆயிரம், ஓட்டல், மார்க்கட் ரூ.600, சிறு வர்த்தக நிறுவனங்கள் ரூ.250 என கட்டணம் வசூலிக்கப்படும்.தையல் கடையில் இருந்து கழிவு துணிகளை சேகரித்து மகளிர் சுய குழுவினரால் பொம்மைகள் தயாரித்து அங்கன்வாடிகளுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அவை நவ.ஒன்று முதல் அமலுக்கு வருகிறது.-----------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X