தமிழ்நாடு

தயார்:பருவமழை மீட்பு பணிக்கு 199 வீரர்கள்

Added : அக் 10, 2021
Share
Advertisement
தேனி - தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பாதிப்பிற்குள்ளாகும் மக்களை மீட்பு பணிக்கு கமாண்டோக்கள் உட்பட 199 வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கும் மக்கள் தங்க 13 இடங்கள் தயார் நிலையில் வைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.வடகிழக்கு பருவமழை அக்.,1 முதல் டிச., 31 வரை பெய்யும். தேனி மாவட்டத்தில் பருவமழை காலத்தில் பேரிடர் பாதிப்பு ஏற்படும் என 49 இடங்கள்

தேனி - தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பாதிப்பிற்குள்ளாகும் மக்களை மீட்பு பணிக்கு கமாண்டோக்கள் உட்பட 199 வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கும் மக்கள் தங்க 13 இடங்கள் தயார் நிலையில் வைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.வடகிழக்கு பருவமழை அக்.,1 முதல் டிச., 31 வரை பெய்யும். தேனி மாவட்டத்தில் பருவமழை காலத்தில் பேரிடர் பாதிப்பு ஏற்படும் என 49 இடங்கள் கண்டறிந்துள்ளனர். இதில் வைகை கரை குன்னுார், அம்மச்சியாபுரம், வள்ளல்நதி, ஆத்தங்கரைப்பட்டி, மூல வைகையாறு, வருஷநாடு, தர்மராஜபுரம், தங்கம்மாள்புரம், செங்குளம், ஒட்டனை, பாலுாத்து, வீரபாண்டி கன்னீஸ்வரமுடையார் கோயில், தேனி கொட்டக்குடி ஆறு, கொட்டக்குடி - முல்லையாறு சந்திக்கும் கூட்டாறு (வேதபுரி), அரண்மனைப்புதுார் பாலம். லட்சுமிபுரம் வரட்டாறு துணை மின் நிலையம், கும்பக்கரை அருவி, சோத்துப்பாறை அணை, பூதிப்புரம், காமயக்கவுண்டன்பட்டி, வரட்டாறு, சாக்கலுாத்து ஓடை. மேகமலை கிராமங்கள், மணலாறு, வண்ணியாறு அணை, குரங்கனி மேல்முட்டம், சுருளியாறு, வைகை அணை அருகிலுள்ள கிராமங்கள் மஞ்சளாறு உட்பட தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. மீட்பு பணிக்குழு:இங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றி தங்க வைக்க 12 பள்ளிக் கட்டடங்கள், 1 திருமண மஹால் என 13 இடங்கள் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை கமாண்டோ வீரர்கள், நீச்சல் பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் 44 பேர், தன்னார்வலர்கள் 32 பேர், கல்லுாரி மாணவ தன்னார்வலர்கள் 106 பேர், நீச்சல் தெரிந்த நீர்நிலைகள் குறித்த விபரங்கள் அறிந்த 17 சிறப்பு தன்னார்வலர்கள் என, 199 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X