சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு தொழிலாளருக்கு இன்னும் சம்பளம் வரலை!

Added : அக் 10, 2021
Share
Advertisement
கோத்தகிரி:கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில் சம்பளம் வழங்கப்படாததால், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில், 250 தற்காலிக தொழிலாளர்கள் உட்பட, 1,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாதம் 4 அல்லது 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படும். எஸ்டேட் வரவு, செலவு கணக்குகள் அனைத்தும், கோடநாடு ஈளாடா பகுதியில் உள்ள ஒரு தேசிய

கோத்தகிரி:கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில் சம்பளம் வழங்கப்படாததால், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில், 250 தற்காலிக தொழிலாளர்கள் உட்பட, 1,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாதம் 4 அல்லது 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படும். எஸ்டேட் வரவு, செலவு கணக்குகள் அனைத்தும், கோடநாடு ஈளாடா பகுதியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உள்ளது.

இம்மாதம் 9ம் தேதி ஆகியும் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.தொழிலாளர்கள் கூறுகையில், 'முன்னாள் முதல்வர் ஜெ., மறைந்த நாளில் கூட சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது சம்பளம் நிறுத்தப்பட்டதால், மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம். ஓரிரு நாட்களில் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என, எஸ்டேட் நிர்வாகம் தெரிவித்துஉள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X