சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் குழந்தை பலி உறவினர்கள் தர்ணா

Added : அக் 10, 2021
Share
Advertisement
பெரம்பலுார்:அரியலுார் அரசு மருத்துவமனை நர்ஸ்களின் அலட்சியத்தால், பெண் சிசு உயிரிழந்ததாக, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பெரம்பலுார் மாவட்டம், குன்னம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மனைவி மணிமேகலை, 24. இவருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன், பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை இறந்தே பிறந்தது.மீண்டும் கர்ப்பமான மணிமேகலைக்கு, நேற்று முன்தினம் பிரசவ வலி

பெரம்பலுார்:அரியலுார் அரசு மருத்துவமனை நர்ஸ்களின் அலட்சியத்தால், பெண் சிசு உயிரிழந்ததாக, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலுார் மாவட்டம், குன்னம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மனைவி மணிமேகலை, 24. இவருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன், பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை இறந்தே பிறந்தது.மீண்டும் கர்ப்பமான மணிமேகலைக்கு, நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டதால் அரியலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அன்று இரவு வலி அதிகமானது குறித்து உறவினர்கள், அங்கிருந்த நர்ஸ்களிடம் கூறியும் அலட்சியமாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், இறந்த நிலையில் பெண் குழந்தை உடல் தானாகவே வெளியே வந்துள்ளது. குழந்தை இறப்பிற்கு, டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களின் அலட்சியமே காரணம் எனக் கூறி, குழந்தை உடலுடன் மணிமேகலையின் உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.போலீசார், 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்ததால், கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X