பொது செய்தி

தமிழ்நாடு

கோயிலில் பக்தருக்கு தடை காணிக்கை வசூலிக்க உண்டியல்

Added : அக் 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோயிலில் தரிசனத்திற்கு தடை விதித்துள்ள அரசு, வசூலுக்காக உண்டியலை முன்வாசல் மண்டபத்தில் வைத்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பண்டிகை காலங்களில் சுவாமி தரிசனம் செய்ய முடியாதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோயில்களின்
 கோயிலில் பக்தருக்கு தடை காணிக்கை வசூலிக்க உண்டியல்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோயிலில் தரிசனத்திற்கு தடை விதித்துள்ள அரசு, வசூலுக்காக உண்டியலை முன்வாசல் மண்டபத்தில் வைத்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பண்டிகை காலங்களில் சுவாமி தரிசனம் செய்ய முடியாதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோயில்களின் வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது,.

இந்நிலையில் கோயில்களில் காணிக்கை குறையாமல் பார்த்துக்கொள்ள ஹிந்து அறநிலைய துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆன்லைன் மூலம் காணிக்கை செலுத்தலாம் என சமீபத்தில் அறிவித்தது. தற்போது பூட்டிக்கிடக்கும் கோயில்களுக்கு வரும் பக்தர்களிடம் காணிக்கையை மட்டும் வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளே இருந்த உண்டியலை வசூலுக்காக கிழக்கு வாசல் முன் மண்டபத்திற்கு மாற்றியுள்ளனர். பூட்டி இருக்கும் கோயில் முன் வந்து வணங்கும் பக்தர்கள் உண்டியலை பார்த்ததும் அங்கிருக்கும் ஊழியர்களிடம் காணிக்கையை வழங்கி உண்டியலில் சேர்க்க சொல்வர் என திட்டமிட்டு கோயில் நிர்வாகம் இதை செயல்படுத்தி உள்ளது.

தரிசனத்திற்கு தடை விதித்துவிட்டு காணிக்கை வசூலுக்கு முக்கியத்துவம் தரும் அரசின் செயலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.ஹிந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்ட பொது செயலாளர் ராமமூர்த்தி கூறும்போது, 'பக்தர்களின் உணர்வை, ஆன்மிகம் சார்ந்த விஷயத்தை அரசு வியாபாரமாக மாற்றியுள்ளது. நம்பிக்கையை கொச்சைப்படுத்துகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N thirumalsi - Sankarankovil,இந்தியா
10-அக்-202107:02:24 IST Report Abuse
N thirumalsi இப்படியே அடைத்து வைத்து விட்டு கோயிலிலுள்ள தங்கம் எல்லாவற்றையும் கொள்ளையடிப்பதற்கு இப்படியே சென்றால் கோயிலுக்கு செல்லும் குறைந்த பக்தர்களும் அதை நிறுத்திக் கொள்வார்கள் அதன் பின்பு கோவிலை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்பின்பு எப்பொழுதாவது கோயிலுக்கு செல்லலாம் என்று நினைத்தால் அப்பொழுது நீங்கள் என்ன வேண்டும் இந்த இடத்தில் ஒரு கோயில் இருந்ததா அப்படின்னு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X