சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பச்சிளம் குழந்தை மீட்பு கடத்திய பெண் கைது

Added : அக் 10, 2021
Share
Advertisement
தஞ்சாவூர:தஞ்சாவூர், ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தையை, 30 மணி நேரத்தில் மீட்ட போலீசார், கடத்திய பெண்ணை கைது செய்தனர்.தஞ்சாவூர், பர்மா காலனியைச் சேர்ந்தவர் குணசேகரன், 24; மனைவி ராஜலட்சுமி, 22. கர்ப்பமாக இருந்த ராஜலட்சுமிக்கு, 5ம் தேதி ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் காலை, வார்டில்

தஞ்சாவூர:தஞ்சாவூர், ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தையை, 30 மணி நேரத்தில் மீட்ட போலீசார், கடத்திய பெண்ணை கைது செய்தனர்.

தஞ்சாவூர், பர்மா காலனியைச் சேர்ந்தவர் குணசேகரன், 24; மனைவி ராஜலட்சுமி, 22. கர்ப்பமாக இருந்த ராஜலட்சுமிக்கு, 5ம் தேதி ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் காலை, வார்டில் உதவியாக இருந்த பெண்ணிடம் குழந்தையை கொடுத்து, ராஜலட்சுமி குளிக்கச் சென்றார். திரும்பி வந்தபோது, அப்பெண், குழந்தையுடன் மாயமாகி இருந்தார்.கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

அப்பெண், குழந்தையுடன் ஆட்டோ ஒன்றில் ஏறிச் சென்றதை கண்டு பிடித்தனர். தொடர் விசாரணையில், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பாலமுருகன் மனைவி விஜி, 37, என்பது தெரிந்தது.

குழந்தை இல்லாத விஜி, வயிற்றில் துணியை சுற்றி கர்ப்பம் தரித்ததாக, கணவர் மற்றும் உறவினர்களை ஏமாற்றி வந்துள்ளார்.குழந்தை பேறுக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறி வந்தவர், அங்கு ராஜலட்சுமியுடன் நெருக்கமாக பழகி, குழந்தையை கடத்தியது தெரிந்தது. தனிப்படை போலீசார், விஜியை கைது செய்து குழந்தையை மீட்டனர்.

மீட்கப்பட்ட குழந்தையை, நேற்று மாலை குணசேகரன் - ராஜலட்சுமி தம்பதியிடம் ஒப்படைத்த எஸ்.பி., ரவளிபிரியா, குழந்தையை 30 மணி நேரத்தில் மீட்ட தனிப்படை போலீசாரை பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X