சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தபால் ஓட்டுக்கு அனுமதி கோரி அங்கன்வாடி ஊழியர்கள் மறியல்

Added : அக் 10, 2021
Share
Advertisement
கண்டமங்கலம்:உள்ளாட்சித் தேர்தலில் தபால் ஓட்டு போட நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து, அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்தில், 6ம் தேதி நடந்த முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலில், அங்கன்வாடி பணியாளர்கள் தபால் ஓட்டு போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்டமங்கலம் பி.டி.ஓ.,
 தபால் ஓட்டுக்கு அனுமதி கோரி அங்கன்வாடி ஊழியர்கள் மறியல்

கண்டமங்கலம்:உள்ளாட்சித் தேர்தலில் தபால் ஓட்டு போட நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து, அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்தில், 6ம் தேதி நடந்த முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலில், அங்கன்வாடி பணியாளர்கள் தபால் ஓட்டு போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்டமங்கலம் பி.டி.ஓ., முருகனை சந்தித்து முறையிட்டும் பலனில்லை.இதை கண்டித்து, 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள், நேற்று காலை 9:00 மணியளவில் பி.டி.ஓ., அலுவலகம் முன் முற்றுகையிட்டனர்.

அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், 10:30 மணியளவில் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் தாசில்தார் வெங்கடசுப்ரமணியன், கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி ஆகியோர் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து, 11:00 மணிக்கு மறியலை கைவிட்டு, மீண்டும் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பி.டி.ஓ., முருகன், தனித்தனியாக கடிதம் கொடுத்தால் கலெக்டரிடம் சிறப்பு அனுமதி பெற்றுத் தருவதாக தெரிவித்தார். பணியாளர்கள் ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.விழுப்புரம் ஆர்.டி.ஓ., அரிதாஸ் வந்து பேச்சு நடத்தினார். அப்போது, 'கால அவகாசம் முடிந்து விட்டதால் தபால் ஓட்டு போட முடியாது' என தெரிவித்தார். இதையடுத்து, நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பின், மதியம் 1:15 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X