பொது செய்தி

தமிழ்நாடு

யானை வழித்தடங்களில் கட்டடம் சுப்ரீம் கோர்ட் கமிட்டி ஆய்வு

Added : அக் 10, 2021
Share
Advertisement
கூடலுார்:முதுமலை சீகூர் பகுதியில் உள்ள யானை வழித்தடங்களில், 'சீல்' வைக்கப்பட்ட விடுதி கட்டடங்களில், சுப்ரீம் கோர்ட் அமைத்த கமிட்டி, கள ஆய்வு மேற்கொண்டது.நீலகிரி மாவட்டம், முதுமலை சீகூர் பகுதியில் யானை வழித்தடங்களில் உள்ள விடுதி கட்டடங்கள், ஆக்கிரமிப்பை அகற்ற, கடந்தாண்டு அக்., 14-ல் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. யானை வழித்தடங்களை மீட்கும் நடவடிக்கையாக, சென்னை
 யானை வழித்தடங்களில் கட்டடம் சுப்ரீம் கோர்ட் கமிட்டி ஆய்வு

கூடலுார்:முதுமலை சீகூர் பகுதியில் உள்ள யானை வழித்தடங்களில், 'சீல்' வைக்கப்பட்ட விடுதி கட்டடங்களில், சுப்ரீம் கோர்ட் அமைத்த கமிட்டி, கள ஆய்வு மேற்கொண்டது.

நீலகிரி மாவட்டம், முதுமலை சீகூர் பகுதியில் யானை வழித்தடங்களில் உள்ள விடுதி கட்டடங்கள், ஆக்கிரமிப்பை அகற்ற, கடந்தாண்டு அக்., 14-ல் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. யானை வழித்தடங்களை மீட்கும் நடவடிக்கையாக, சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில், மூன்று பேர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இக்கமிட்டி, கடந்த ஆண்டு நவ., மாதம் மூன்று நாட்கள், மசினகுடியில் யானை வழித் தடங்களில் ஆய்வு செய்தது. ஊட்டி ஜிம்கானா கிளப் சாலை, வனவியல் விரிவாக்க அலுவலக கட்டடத்தில், யானை வழித்தட விசாரணை குழு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கோர்ட் உத்தரவால் தாங்கள் பாதிக்கப்படுவதாக 224 பேர், தங்களிடம் ஆதாரமாக உள்ள ஆவணங்களை, விசாரணை கமிட்டி அலுவலகத்தில் சமர்ப்பித்தனர். இதன் அடிப்படையில், தற்போது விசாரணை நடந்து வருகிறது.

முதல் கட்டமாக, சீகூர் யானை வழிதடத்தில் உள்ள 13 இடங்களில், சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில், உறுப்பினர்கள் பிரவீன் பாக்கே, நந்திதா அசாரிக்கா ஆகியோர் கள ஆய்வு செய்தனர். 'சீல்' வைக்கப்பட்ட அறைகளை திறந்து ஆய்வு செய்து, அளவீடு செய்தனர்.

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் வருவாய், வனத்துறை அதிகாரி கள் உடனிருந்தனர். நேற்று, எட்டு இடங்களில் ஆய்வு செய்தனர். இன்று, மேலும் ஐந்து இடங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.கமிட்டியின் தலைவரான முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் கூறுகையில், ''விண்ணப்பதாரர்கள் நேரடியாகவும், வக்கீல்கள் வாயிலாகவும் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர். ''அதனடிப்படையில், ஆய்வு பணிகள் மேற்கொண்டு வருகிறோம். ஆய்வு முடிந்த பின் விபரம் தெரிய வரும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X