பொது செய்தி

தமிழ்நாடு

பயங்கரவாதிகளுக்கு உதவும் பாக்.,குக்கு பாடம் புகட்டுங்கள்': வி.எச்.பி., பொதுச்செயலாளர் மிலன் பிராண்டே யோசனை

Added : அக் 10, 2021
Share
Advertisement
பழநி:'காஷ்மீரில் சிறுபான்மையாக உள்ள ஹிந்துக்கள், சீக்கியர்களை கொன்ற பயங்கரவாதிகளுக்கு உதவும் பாகிஸ்தானுக்கு, இந்திய அரசு பாடம் கற்பிக்க வேண்டும்'' என, பழநியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அகில உலக பொதுச்செயலாளர்மிலன் பராண்டே கூறினார்.பழநியில் விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் கூறியதாவது:காஷ்மீரில் சிறுபான்மையாக உள்ள

பழநி:'காஷ்மீரில் சிறுபான்மையாக உள்ள ஹிந்துக்கள், சீக்கியர்களை கொன்ற பயங்கரவாதிகளுக்கு உதவும் பாகிஸ்தானுக்கு, இந்திய அரசு பாடம் கற்பிக்க வேண்டும்'' என, பழநியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அகில உலக பொதுச்செயலாளர்மிலன் பராண்டே கூறினார்.

பழநியில் விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் கூறியதாவது:காஷ்மீரில் சிறுபான்மையாக உள்ள ஹிந்துக்கள், சீக்கியர்களை சில நாட்களாக பயங்கரவாதிகள் கொலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு பாகிஸ்தான் உதவி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய அரசு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

தமிழகத்தில் ஹிந்து மதத்திற்கு எதிராக மதமாற்றம் தீவிரமாக நடக்கிறது. குறிப்பாக வறுமையில் வாடும் ஏழைகளை மதம் மாற்றி வருகின்றனர். எனவே, கடுமையான மதமாற்ற தடை சட்டத்தை உருவாக்க வேண்டும்.தமிழகத்தில் ஹிந்து கோயில்களை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தவறானது.

கோயிலுக்கு காணிக்கையாக வரும் தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றுவதும் முற்றிலும் தவறு. கோயில்களை தமிழக அரசு வியாபார நோக்கத்துடன் அணுகக் கூடாது. அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் 2023 டிசம்பரில் அக்கோயிலின் கர்ப்பகிரகத்தில் ராமபிரான் அமர்வார், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X