சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குளத்து நீரை குடிக்கும் மாணவர்கள்:கொரோனா காலத்தில் இப்படியும் ஓர் அவலம்

Added : அக் 10, 2021
Share
Advertisement
நரிக்குடி:விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஆனைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிநீர் வசதி இல்லாததால் குளம்கண்மாய் நீரை பருகும் நிலையில் மாணவர்கள் உள்ளனர். இதனால் கொரோனா காலத்தில் மேலும் பல தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.ஆனைகுளம் அரசு மேல்நிலை பள்ளியில் குடிநீர் கழிப்பறை என எந்த வசதியும் இல்லை. கொரோனாவால் பள்ளி மூடப்பட்டிருந்த நிலையில் பராமரிப்பும் அறவே
 குளத்து நீரை குடிக்கும் மாணவர்கள்:கொரோனா காலத்தில் இப்படியும் ஓர் அவலம்

நரிக்குடி:விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஆனைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிநீர் வசதி இல்லாததால் குளம்கண்மாய் நீரை பருகும் நிலையில் மாணவர்கள் உள்ளனர். இதனால் கொரோனா காலத்தில் மேலும் பல தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆனைகுளம் அரசு மேல்நிலை பள்ளியில் குடிநீர் கழிப்பறை என எந்த வசதியும் இல்லை. கொரோனாவால் பள்ளி மூடப்பட்டிருந்த நிலையில் பராமரிப்பும் அறவே இல்லை. பல மாதங்களுக்குப்பின் 9 முதல் 12ம் வகுப்பு வரை நடைபெறுகிறது. இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். குடிநீர் வசதி இல்லாததால் தண்ணீர் தாகத்தை தீர்க்க அங்குள்ள குளம் கண்மாயில் தேங்கியுள்ள நீரை குடிக்கின்றனர்.

அங்கு ஆடு மாடு குளிப்பாட்டுவதோடு துணிகளையும் துவைப்பதால் நீர் மாசடைந்து பச்சை பசேலென உள்ளது. இந்நீரை பயன்படுத்தும் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. தற்போது டெங்கு மலேரியா காய்ச்சல் பரவி வருவதால் மாணவர்கள் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். இதை தடுக்க பள்ளியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

மாணவர்கள் கூறியதாவது: பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட பின் குடிக்க தண்ணீர் கிடையாது. பாட்டிலில் கொண்டு வரும் தண்ணீர் போதவில்லை. மாசு படிந்த குளத்து நீரை குடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கழிப்பறை இன்றி மாணவிகள் சிரமப்படுகின்றனர். எங்களின் தாகத்தை தீர்க்க மாவட்ட நிர்வாகம் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


நடவடிக்கை

பள்ளி தலைமையாசிரியை லீலாவதி கூறியதாவது: பள்ளியில் குடிநீர் பிரச்னை இருப்பது உண்மை தான். ஊராட்சி தலைவரிடம் பேசி நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாநில நெடுஞ்சாலை ரோட்டை கடந்து பைப்லைன் வர வேண்டி உள்ளதால் அவர்களது அனுமதிக்காக காத்திருக்கிறோம். விரைவில் குடிநீர் கழிப்பறை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X