சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை நிறுவனத்திற்கு சாதகமாக அதிகாரி

Added : அக் 10, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வணிக இடங்களை ஏலம் விட்டதில் மதுரையை சேர்ந்த நிறுவனத்திற்கு சாதகமாக அதிகாரி செயல்பட்டு பல கோடி ரூபாய் வாரியத்துக்கு இழப்பு ஏற்படுவது இணைய விளம்பரத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள வீட்டு வசதி வாரியத்தின் வணிகப் பயன்பாட்டு
 மதுரை நிறுவனத்திற்கு சாதகமாக அதிகாரி

கோவை:கோவையில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வணிக இடங்களை ஏலம் விட்டதில் மதுரையை சேர்ந்த நிறுவனத்திற்கு சாதகமாக அதிகாரி செயல்பட்டு பல கோடி ரூபாய் வாரியத்துக்கு இழப்பு ஏற்படுவது இணைய விளம்பரத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள வீட்டு வசதி வாரியத்தின் வணிகப் பயன்பாட்டு இடங்கள் செப். 23ல் ஏலம் விடப்பட்டன. 107 இடங்களுக்கு ஏலம் விட்டதில் மிகக்குறைவான இடங்களுக்கு மட்டுமே டெண்டர் வந்துள்ளது. அவற்றிலும் 20க்கும் குறைவான இடங்களுக்கு சிங்கிள் டெண்டர்கள் மட்டுமே வந்துள்ளன.மதுரையை சேர்ந்த குறிப்பிட்ட குடும்பத்திலிருந்தே இந்த சிங்கிள் டெண்டர்கள் அனைத்தும் வந்துள்ளன.

இந்த இடங்களின் சந்தை மதிப்புக்கு சற்றும் தொடர்பில்லாத வகையில் மிகமிகக்குறைவான மதிப்பே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.வாரியம் நிர்ணயித்த தொகையை விட குறைவான மதிப்புக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. உதாரணமாக உடுமலை அண்ணா குடியிருப்புப் பகுதியிலுள்ள ஒரு வணிக மனைக்கு ஒரு கோடியே 68 லட்ச ரூபாய் என்று வாரியம் மதிப்பு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் அந்த இடத்துக்கு 18 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் கோரப்பட்டுள்ளது. அதையும் ஏற்று வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளனர்.

கோவை கணபதி காந்தி மாநகரில் 88 சென்ட் இடத்துக்கு 8 கோடியே 89 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் என்று வாரியம் மதிப்பு நிர்ணயித்துள்ளது. ஒரு சென்ட்டுக்கு 10 லட்ச ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த இடம் இப்போது ஒரு சென்ட் 16 லட்சத்தில் இருந்து 18 லட்ச ரூபாய் வரை விலை போகிறது. இந்த இடத்துக்கு ஒரு பகுதி ஏலத்தொகையை செலுத்தியுள்ள ஒரு நிறுவனம் கிரையம் செய்வதற்கு முன்பாகவே சென்ட் ரூ. 20 லட்சம் என இணையத்தில் விளம்பரம் செய்துள்ளது.
இந்த ஏலத்துக்கு வீட்டு வசதி வாரியத்தின் மதுரை பிரிவு கண்காணிப்புப் பொறியாளர் ஒருவர் பொறுப்பாளராக இருந்து ஏலத்தை முடித்து வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார். சிங்கிள் டெண்டர் கொடுத்துள்ள நிறுவனங்களும் மதுரையைச் சேர்ந்தவையாக இருப்பதால் அதிகாரிகள் மற்றும் சில தனிநபர்களின் சிண்டிகேட் என்று சந்தேகம் எழுந்துள்ளது.ஏலத்தை ரத்து செய்து மதிப்பை மறு நிர்ணயம் செய்து ஏலம் விட கோரிக்கையும் வலுத்துள்ளது.

கோவை வீட்டு வசதி வாரிய கண்காணிப்புப் பொறியாளர் சாந்தியிடம் கேட்டதற்கு ''அந்த ஏலத்துக்கு நான் பொறுப்பு அதிகாரி கிடையாது என்பதால் ஒன்றும் சொல்ல முடியாது'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X