பெரியாறு அணையில் மழை

Added : அக் 10, 2021
Share
Advertisement
தேக்கடி:நீர்பிடிப்பில் பெய்த மழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1313 கனஅடியாக அதிகரித்தது. கடந்த சில நாட்களாக பெரியாறு அணையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி பெரியாறில் 25.6 மி.மீ., தேக்கடியில் 25.4 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு நீர்வரத்து 1188 கன அடியிலிருந்து 1313 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் 128.40 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). நீர்

தேக்கடி:நீர்பிடிப்பில் பெய்த மழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1313 கனஅடியாக அதிகரித்தது.

கடந்த சில நாட்களாக பெரியாறு அணையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி பெரியாறில் 25.6 மி.மீ., தேக்கடியில் 25.4 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு நீர்வரத்து 1188 கன அடியிலிருந்து 1313 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் 128.40 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 4352 மில்லியன் கனஅடியாகும்.

தமிழகப்பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 1300 கனஅடி திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று பகல் முழுவதும் நீர்பிடிப்பில் மேக மூட்டத்துடன் இருந்தது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X