பொது செய்தி

இந்தியா

'சாதாரண மக்களுக்கும் ஹெலிகாப்டர் பயணம்' : ஜோதிராதித்யா சிந்தியா

Updated : அக் 10, 2021 | Added : அக் 10, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
டேராடூன்-''சாதாரண மக்களின் வாகனமாக ஹெலிகாப்டர் இருக்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசின் ஹெலிகாப்டர் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது,'' என, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கூறினார்.உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள டேராடூனில் விமான போக்குவரத்து அமைச்சகம், இந்திய தொழில் மற்றும்

டேராடூன்-''சாதாரண மக்களின் வாகனமாக ஹெலிகாப்டர் இருக்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசின் ஹெலிகாப்டர் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது,'' என, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கூறினார்.



latest tamil news


உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள டேராடூனில் விமான போக்குவரத்து அமைச்சகம், இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் 'பவன் ஹன்ஸ் லிமிடெட்' ஆகியவை இணைந்து ஹெலிகாப்டர் பயன்பாடு தொடர்பான மாநாட்டை நடத்தின.

இதில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா பேசியதாவது:சாதாரண மக்களும் ஹெலிகாப்டரில் பயணம் செய்ய வேண்டும். அவர்களின் போக்குவரத்து வாகனமாக ஹெலிகாப்டர் மாற வேண்டும் என்ற நோக்கில் தான் மத்திய அரசின் ஹெலிகாப்டர் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் போக்குவரத்தை விரிவுப்படுத்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

விமான போக்குவரத்து அமைச்சகத்தில் ஹெலிகாப்டருக்கு என தனிப்பிரிவு துவக்கப்படும்.ஹெலிகாப்டர்களுக்கு இறங்கும் கட்டணம்,'பார்க்கிங் டிபாசிட்' ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. நாட்டில் ௧௦ நகரங்களில் ௮௨ தடங்களில் ஹெலிகாப்டர் காரிடார்கள் ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.


latest tamil news


மலைப்பகுதிகளில் ஹெலிகாப்டர் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சாதாரண மக்களும் பயணிக்கும் வகையில் ஹெலிகாப்டர் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் அய்யா இங்கே அனுபவமே எங்களுக்கு கொலை நடுங்குது இதுல நீங்க வேற
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
10-அக்-202113:15:55 IST Report Abuse
Vena Suna குற்றவாளிகளை ஏற்றி நேராக திஹாரில் போடலாம்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
10-அக்-202113:15:25 IST Report Abuse
Ramesh Sargam இந்தியாவின் பல நகரங்களில், பல கிராமங்களில் ஒழுங்கான சாலைகள் இல்லாததால் பஸ் போக்குவரத்தே இல்லாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள் ஆளாகின்றனர். முதலில் சாலைகளை போட்டு, அதில் அதிக அளவில் பஸ் விட்டால் உங்களுக்கு ரொம்ப புண்ணியமாப்போகும். ஹெலிகாப்டர் பயணம் எல்லாம் எங்களுக்கு வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X