பொது செய்தி

இந்தியா

பிரதமரின் ‛கதி சக்தி' திட்டம் வரும் அக்.,15ல் துவக்கம்

Updated : அக் 10, 2021 | Added : அக் 10, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி-சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அறிவித்த, 'பிரதமர் கதி சக்தி திட்டம்' வரும் 15ல் துவக்கப்படுகிறது.நாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர தினம் கடந்த ஆக., 15ல் கொண்டாடப்பட்டது. அப்போது டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி பிரதமர் மோடி பேசுகையில், 'தொழில் துறையில் உலக அளவில் இந்தியா போட்டியிட உதவும் வகையில், 'பிரதமர் கதி சக்தி' என்ற தேசிய மாஸ்டர் பிளான்

புதுடில்லி-சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அறிவித்த, 'பிரதமர் கதி சக்தி திட்டம்' வரும் 15ல் துவக்கப்படுகிறது.



latest tamil news



நாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர தினம் கடந்த ஆக., 15ல் கொண்டாடப்பட்டது. அப்போது டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி பிரதமர் மோடி பேசுகையில், 'தொழில் துறையில் உலக அளவில் இந்தியா போட்டியிட உதவும் வகையில், 'பிரதமர் கதி சக்தி' என்ற தேசிய மாஸ்டர் பிளான் திட்டம் நிறைவேற்றப்படும்' என்றார்.

இந்நிலையில் கதி சக்தி திட்டத்தை பிரதமர் மோடி, வரும் ௧௫ல் துவக்கி வைக்கிறார். இந்த திட்டம் பற்றி, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பிரதமர் கதி சக்தி திட்டம் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும். நிர்வாகத்தில் பெரிய மாற்றத்தை இந்த திட்டம் ஏற்படுத்தும்,.மத்திய அரசின் ௧௬ துறைகள் ஒரே 'டிஜிட்டல் பிளாட்பார்மில்' இணைக்கப்பட்டு, 2025ம் ஆண்டு வரைக்கான உள்கட்டமைப்பு பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள இந்த திட்டம் வழிவகுக்கிறது.


latest tamil news


இந்த பிளாட்பாரத்தில் இணைய, மாநில அரசுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ரயில்வே, நெடுஞ்சாலை, பெட்ரோலியம், மின்சாரம், தொலை தொடர்பு உள்ளிட்ட ௧௬ துறைகள் ஒரே டிஜிட்டல் பிளாட்பாரத்தில் இணைக்கப்பட உள்ளன. இவை தங்களின் உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களை மற்ற துறைகளுக்கு தெரிவிக்க உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sandru - Chennai,இந்தியா
10-அக்-202113:17:51 IST Report Abuse
Sandru பிரதமர் மோடியின் வேகத்தை பார்த்தால் கண்ணை கட்டுது. இரவு உறங்க செல்லும் முன் அடுத்த நாள் மக்களை கதி கலங்க செய்யும் திட்டம் ஒன்றை உறுதி செய்த பின்தான் உறங்குகிறார் . அதில் ஒன்றுதான் இந்த அதோ கதி சாகுங்கள் திட்டம்.
Rate this:
Cancel
10-அக்-202112:59:02 IST Report Abuse
அப்புசாமி மக்களுக்கு தொட்டதுக்கெல்லாம் ஓர் அட்டையைக் குடுத்து இதுதான் முன்னேற்றம்னு காட்டுறாங்க. இந்த அட்டைகளையெல்லாம் ஒண்ணா சேத்து லிங்க் பண்ணி கதிசக்தி யோஜனா. மத்தபடி வேற எதுவும் நடக்க வாய்ப்பில்லை.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
10-அக்-202111:47:27 IST Report Abuse
Ramesh Sargam இந்நிலையில் கதி சக்தி திட்டத்தை பிரதமர் மோடி, வரும் 15ல் துவக்கி வைக்கிறார். - 'கருல்' என்றால் என்ன அர்த்தம்? நான் இதுவரை அந்த '15ல்' என்கிற வார்த்தையை கேள்விப்பட்டது கிடையாது. ஆகையால் கேட்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X