பொது செய்தி

இந்தியா

திருமலையில் மூன்றாம் நாள் பிரமோற்சவம்: சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி

Updated : அக் 10, 2021 | Added : அக் 10, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
திருப்பதி--திருமலை ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் காலை, சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.திருமலையில் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. மூன்றாம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி சேவை சாதித்தார்.நவராத்திரியின் அம்சத்தை

திருப்பதி--திருமலை ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் காலை, சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.



latest tamil news


திருமலையில் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. மூன்றாம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி சேவை சாதித்தார்.நவராத்திரியின் அம்சத்தை பின்பற்றி பிரம்மோற்சவத்தின் வாகனச் சேவைகள் அமைந்துள்ளன.


latest tamil news


முதல் இரண்டு நாட்கள் ஊர்வன, பறப்பன வாகனங்களில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி, மூன்றாம் நாள் காலை, காட்டிற்கு ராஜாவான மிருக அம்சமுடைய சிம்ம வாகனத்தில் வலம் வந்தார். மாலையில், முத்துபந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் எழுந்தருளினார். வாகனச் சேவையின்போது மங்கல வாத்தியங்கள், வேத கோஷம், நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
10-அக்-202113:22:11 IST Report Abuse
தஞ்சை மன்னர் இப்படி சொல்ல வெ இல்லை இருந்த ஒரு விமான சர்விசை வித்து விட்டு சொந்தமாக விமான சர்விஸ் இல்லாத நாட்டோட லிஸ்ட் டில் 300 கோடி மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய ஜனநாய நாடான இந்தியாவை சேர்த்து விட்டு ஹெலிகாப்டர் விடப்போறோம் என்று யார்க்கு குத்த..கை விட எண்ணம் யாரு ஓ.னர் அம்பானிய இல்ல அதானிய
Rate this:
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
10-அக்-202107:07:29 IST Report Abuse
ganesha மலையப்பா, கோவிந்தா. கோவிந்தா கோவிந்தா
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
10-அக்-202106:01:33 IST Report Abuse
Kasimani Baskaran அனைவருக்கும் அவனது அருள் நிச்சயம் கிடைக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X