இந்தியா

'புதிய பார்லி., கட்டட பணி திட்டமிட்டபடி முடிக்கப்படும்'

Updated : அக் 10, 2021 | Added : அக் 10, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி :''புதிய பார்லி., கட்டடம் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும்'' என மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துஉள்ளார்.டில்லியில் 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தின் கீழ் புதிய பார்லி. கட்டடம் மத்திய அரசு அலுவலகங்கள் கட்டப்படுகின்றன. இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் ஹர்தீப்
'புதிய பார்லி., கட்டட பணி திட்டமிட்டபடி முடிக்கப்படும்'

புதுடில்லி :''புதிய பார்லி., கட்டடம் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும்'' என மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்து
உள்ளார்.டில்லியில் 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தின் கீழ் புதிய பார்லி. கட்டடம் மத்திய அரசு அலுவலகங்கள் கட்டப்படுகின்றன.

இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பேசியதாவது:தற்போதைய பார்லி. கட்டடம் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. தற்போது எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகரித்துஉள்ளது. அதற்கேற்ப அந்த கட்டடத்தில் ஏராளமான கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


latest tamil news




இதனால் கட்டுமான அடிப்படையில் பார்த்தால் பார்லி., கட்டடம் பாதுகாப்பானது அல்ல. அந்த கட்டடம் கட்டும் போது நிலநடுக்க மண்டல குறியீடு 2 ஆக இருந்தது.இது தற்போது 4 ஆக உயர்ந்துள்ளது. இது மிகைப்படுத்தப்பட்ட அளவு அல்ல.நாங்கள் பீதியை ஏற்படுத்த விரும்பவில்லை. இந்த அம்சங்களை கருதித் தான் புதிய பார்லி. கட்டடம் கட்டப்படுகிறது.

திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு டிசம்பரில் புதிய பார்லி. கட்டடம் தயாராகி விடும். அங்கு குளிர்கால கூட்டத் தொடர் நடக்கும்.ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான மறுகட்டுமான பணிகளும் குறித்த காலத்தில் முடிவடைந்து புதுப்பிக்கப்பட்ட ராஜபாதையில் 2022 குடியரசு தின விழா நடக்கும்.இவ்வாறு அவர்
பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-அக்-202107:06:14 IST Report Abuse
அப்புசாமி நிச்சயமாக... தினமும் இரவில் போய் ஒரு பெரியவர் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்யுறாராம்.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
10-அக்-202106:02:52 IST Report Abuse
வெகுளி புதிய பார்லி. கட்டடத்தில் எதிர்க்கட்சியினர் அமர 50 இருக்கைகள் இருந்தால் அவர்கள் காற்றோட்டமாக அமரலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X