சசிக்கு சலுகை: உள்துறை செயலர் ஆஜராக உத்தரவு

Updated : அக் 10, 2021 | Added : அக் 10, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
பெங்களூரு-தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தோழி சசிகலாவுக்கு, பெங்களூரு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்க, 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற இரண்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததால், நான்கு வாரங்களில் உள்துறை முதன்மை செயலர் ஆஜராகும்படி, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தமிழக முன்னாள்

பெங்களூரு-தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தோழி சசிகலாவுக்கு, பெங்களூரு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்க, 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற இரண்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததால், நான்கு வாரங்களில் உள்துறை முதன்மை செயலர் ஆஜராகும்படி, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.latest tamil news


கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஜனவரியில் விடுதலை செய்யப்பட்டார்.சிறையில் இருக்கும் போது அவருக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததாகவும், அதற்காக சிறை அதிகாரிகள், 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் புகார் எழுந்தது.

சசிகலா சிறையில் இருந்த போது அவருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மை என ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்மட்ட கமிட்டி அறிக்கை தாக்கல் செய்திருந்தது.இந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, ஊழல் ஒழிப்பு போலீஸ் பிரிவில், புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக, சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா தொடர்ந்த வழக்கு சமீபத்தில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலாவிடம் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று, சொகுசு வசதி செய்து கொடுத்த அப்போதைய சிறைத்துறை டி.ஜி.பி., சத்யநாராயணராவ், அப்போதைய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உள்துறை முதன்மை செயலர் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டியிருக்கும் என்றும் நீதிமன்றம் எச்சரித்திருந்தது.

நீதிமன்றம் வழங்கிய கால அவகாசத்துக்குள் தவறு செய்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, தன் மாமனார் இறந்ததால் உள்துறை முதன்மை செயலர் ஆஜராகவில்லை என வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் அவர் ஆஜராக நான்கு வாரங்கள் கால அவகாசம் கோரினார்.அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், நான்கு வாரத்துக்குள் ஆஜராகும்படி உத்தரவிட்டது.


latest tamil newsமொபைல் போன்கள் பறிமுதல்

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கீதாவின் வழக்கறிஞர் அரவிந்த் கூறியதாவது:சசிகலா, அவரது உறவினர் இளவரசி ஆகியோர் சிறையிலிருந்த போது அவர்களிடமிருந்து நான்கு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதும், அதிலிருந்து 280 தொலைபேசி அழைப்புகள் பேசப்பட்டுள்ளதும் விசாரணையில் ஏற்கனவே தெரிந்துள்ளது.

ஆனால் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் வழக்கு தொடர்ந்த பின், இதுகுறித்து அறிக்கை அளிக்கும்படி தடயவியல் ஆய்வு துறைக்கு லஞ்ச ஒழிப்புத் துறை கடிதம் எழுதியுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இந்த வழக்கில், சசிகலா சிறையில் இருந்து எங்கெங்கு சென்றார், என்னென்ன சொகுசு வசதிகள் பெற்றார் என்பது உட்பட பல அதிர்ச்சியான தகவல்கள் ஏற்கனவே வினய்குமார் அறிக்கையில் தெளிவாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.அந்த அறிக்கையை வெளியிடாமல் தற்பொழுது வரை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
10-அக்-202117:14:11 IST Report Abuse
M  Ramachandran தீ முக்கா காரர்களிடம் முக்கியமா மஞ்ச தூண்டுவிடம் ட்ரைனிங் எடுத்திருக்க வேண்டும். வெகு சுலபமாக எனமற்றி இருக்கலாம்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
10-அக்-202117:12:47 IST Report Abuse
M  Ramachandran மாமனார் இறந்து விட்டார் மச்சினிக்கு வளைகாப்பு மச்சினனுக்கும் வைத்து வலி இப்படியெ காலம் தள்ளிகொண்டே போய் வயது மூப்பு அதனால் மறதி என்று முடித்து விடுவார்கள்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
10-அக்-202114:08:02 IST Report Abuse
Vena Suna திமுக ஆளுங்க கோடி கோடியா லஞ்சம் பண்ணினாலும் கில்லாடிங்க. ஜெயிலுக்கு போகவே இல்லையே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X